12-25-2005, 02:33 AM
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கோ கதீட்ரல் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது 2 அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் பரராஜசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த தேவாலயத்துக்கு ஜோசப் பரராஜசிங்கம் சென்றுள்ளார். மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை வழிபாடுகளை 11.30 மணிக்குத் தொடங்கியுள்ளார்.
1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார். இவருக்கு 2 மகன்இ ஒரு மகள் உள்ளனர்.
மட்டக்களப்பு அரச செயலகத்தில் வரைபட பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தினபதி என்ற தமிழ் நாளிதழின் பகுதிநேர ஊடகவியலாளராக பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தொடர்ந்து ஆக்கங்களை அவர் எழுதி வந்தார்.
1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.
2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசியப் பட்டியலினூடாக அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளுள் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.
பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்