12-24-2005, 11:19 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!</b>
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/SL_Politics/joseph-para-sm.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரின் மத்திய பகுதியின் பிரதான வீதியில் அமைந்துள்ள சென்ட் மேரீஸ் கோ கதீட்ரல் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுனம் பரராஜசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1934 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார்.
1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.
பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.
இணைப்பு : kugan
நன்றி: லங்காசிறீ.கொம்</span>