Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேர்வேயிலேயே பேச்சு...
#1
நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன்

நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இவ்வாறு தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் ஊடக வியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்த சு.ப. தமழ்ச்செல்வன் இதனைக் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவே இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டதாக சு.ப தமிழச்செல்வன் தெரிவித்தாh தற்போது சிறீலங்கா இராணுவம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது இளம்பெண் ஒருவர் புங்குடுதீவில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் கொந்தளிப்பது தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் யுத்தநிறுத்தம் அமுலாக்கம் சரியான முறையில் நடைமுறையில் இருந்தால் மட்டுமே பேசு;சுக்களுக்கான நல்ல சூழல் உருவாகும் தமிழ்மக்களும் சர்வதேசமும் தமழீழ விடுதலைப்புலிகளும் பேச்சுக்கள் நடைபெற வேண்டு மென்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சிங்கள தேசம் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றது நோர்வே அனுசரணை வழங்க வேண்டும் என்று கூறும் அரசு ஆசியாவில் பேச்சு நடத்த வேண்டும் எனக் குறிப்பிடுகிறது முரண்பட்ட நிலைப்பாட்டை உருவாக்கி யிருக்கின்றது என்று குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று மு.ப 11.50 மணியளவில் ஆரம்பமாகி 2.50 மணிக்கு முடிவடைந்தது இன்றைய சந்திப்பில் சு.ப தமிழ்ச்செல்வனுடன் காவல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் சமாதானச் செயலகப்பொறுப்பாளர் புலித்தேவனும் கலந்து கொண்டார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ய10லியன் வில்சன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸ்ரீபன் இவான் யப்பானிய தூதுவர் அக்கியோ சூடா நோர்வேயின் பிரதி தூதுவர் ஒட்வர் லிங்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.


லங்காசிறி
Reply


Messages In This Thread
நேர்வேயிலேயே பேச்சு... - by நர்மதா - 12-24-2005, 11:25 AM
[No subject] - by நர்மதா - 12-24-2005, 01:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)