![]() |
|
நேர்வேயிலேயே பேச்சு... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நேர்வேயிலேயே பேச்சு... (/showthread.php?tid=1822) |
நேர்வேயிலேயே பேச்சு... - நர்மதா - 12-24-2005 நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இவ்வாறு தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் ஊடக வியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்த சு.ப. தமழ்ச்செல்வன் இதனைக் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவே இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டதாக சு.ப தமிழச்செல்வன் தெரிவித்தாh தற்போது சிறீலங்கா இராணுவம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது இளம்பெண் ஒருவர் புங்குடுதீவில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் கொந்தளிப்பது தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் யுத்தநிறுத்தம் அமுலாக்கம் சரியான முறையில் நடைமுறையில் இருந்தால் மட்டுமே பேசு;சுக்களுக்கான நல்ல சூழல் உருவாகும் தமிழ்மக்களும் சர்வதேசமும் தமழீழ விடுதலைப்புலிகளும் பேச்சுக்கள் நடைபெற வேண்டு மென்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சிங்கள தேசம் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றது நோர்வே அனுசரணை வழங்க வேண்டும் என்று கூறும் அரசு ஆசியாவில் பேச்சு நடத்த வேண்டும் எனக் குறிப்பிடுகிறது முரண்பட்ட நிலைப்பாட்டை உருவாக்கி யிருக்கின்றது என்று குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று மு.ப 11.50 மணியளவில் ஆரம்பமாகி 2.50 மணிக்கு முடிவடைந்தது இன்றைய சந்திப்பில் சு.ப தமிழ்ச்செல்வனுடன் காவல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் சமாதானச் செயலகப்பொறுப்பாளர் புலித்தேவனும் கலந்து கொண்டார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ய10லியன் வில்சன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸ்ரீபன் இவான் யப்பானிய தூதுவர் அக்கியோ சூடா நோர்வேயின் பிரதி தூதுவர் ஒட்வர் லிங்க் ஆகியோர் கலந்து கொண்டனர். லங்காசிறி - நர்மதா - 12-24-2005 சர்வதேச சமூகமும் தமிழர் - சிங்களவர் தரப்பும் அனுசரணையாளராக ஏற்றுக் கொண்ட நோர்வே நாட்டில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுகளை நடத்த வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையேயான சந்திப்பில் இனை தெரிவித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: தற்போதைய நெருக்கடி நிலைமைகள் பற்றி இணைத் தலைமை நாடுகள் தீவிர கரிசனை செலுத்தினார்கள். இந்த நெருக்கடியைச் சீர்செய்வது தொடர்பாகவும் மக்களின் கொந்தளிப்பை தணித்து இயல்பு நிலையை கொண்டுவருவது தொடர்பாகவும் இன்றைய பேச்சுக்கள் அமைந்தன. இது தொடர்பிலான எமது தெளிவான விளக்கத்தை நாம் அளித்திருக்கிறோம். மக்கள் மீது இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள மோசமான வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். புங்குடுதீவில் எங்கள் பெண் ஒருவரை கடற்படையினர் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவத்தால் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பது என்பதையும் சுட்டிக்காட்டினோம். இதன் விளைவாகவே மக்களின் கிளர்ந்து எழுதுவதும் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடியாக யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களை தொடங்க வேண்டும். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை சீர்செய்யுமாறு நாம் விடுத்த வேண்டுகோளை உடனே ஏற்று இங்கு வருகை தந்து எமது தலைமைப்பீடத்தின் கருத்துகளை அறிய முற்பட்டதும் இந்தப் பிரச்சனையில் தீவிர கரிசனையை அவர்கள் செலுத்திவருவதும் நன்றிக்குரியதாகும். அடுத்த கட்ட நகர்வுகளுக்காக அவர்கள் ஆலோசனை வழங்கியமையை நாம் வரவேற்கிறோம். இருதரப்பும் உடனே பேச்சுகள் நடத்த வேண்டும் என்பது அவர்கள் வழங்கிய ஆலோசனையில் முதன்மையாக இருந்தது. ஆனால் அரச தரப்பு எவ்வள தூரம் இணக்கத்துக்கு வரும் என்பது கேள்வியாக இருக்கிறது. ஜப்பானில் பேச்சு நடத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அனுசரணையாளராக நோர்வே இருப்பதால் முதற்கட்டப் பேச்சு நோர்வேயில் நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்பதை இன்று வந்த ஜப்பானிய தூதுவரிடம் தெரிவித்தோம். அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்ட நோர்வேயின் அனுசரணைப் பணியை தென்னிலங்கை கடுமையாக விமர்சிக்கிறது. நோர்வே அனுசரணையாளராக இருக்க வேண்டும். ஆனால் ஆசிய நாட்டில் பேச்சு நடத்த வேண்டும் என்பது முரண்பாடானது. தமிழர்களுக்கு எதிரான சதி. ஆகவே நோர்வேயில்தான் பேச்சு நடத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை இணைத்தலைமை நாடுகளிடம் விளக்கினோம். சர்வதேச சமூகத்துடனான தமிழர்களது - விடுதலைப் புலிகளினது தொடர்புகளை அறுப்பது என்பதை அனுமதிக்க முடியாது. தமிழர் தாயகத்தில் பொதுமக்கள் மீதான வன்முறைகள்இ அதற்கான படைத்தரப்பின் மீதான எதிர்வினைகள் ஆகியவற்றின் தீவிரத்தன்மையை உணர்ந்தவர்களாக இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் இருந்தனர். 4 வருட யுத்த நிறுத்த காலம் எம் மக்களின் வாழ்க்கையில் இராணுவ நெருக்குவாரங்களை அதிகரித்துள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தோம். இணைத் தலைமை நாடுகளின் குழுவில் வேறு எந்த ஒருநாடும் இணைவது தொடர்பாக எந்த ஒரு உத்தியோகபூர்வமான தகவலும் எமக்கு வரவில்லை. சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதியில் வயது வேறுபாடின்றி மக்கள் தாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இராணுவத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். அந்தத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் நிராகரிக்கிறோம். அப்படியான தாக்குதல் மேற்கொள்ள வேண்டுமானால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர் நாம் தாக்குதல்களை மேற்கொள்ளோம். ஆனால் நாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கிறோம். அந்தத் தாக்குதல்களுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்றார் தமிழ்ச்செல்வன் புதினம் |