12-24-2005, 03:10 AM
Quote:புலிகளுக்கு ஆறுமுகம் தொண்டமானைப் பற்றி நன்கு தெரியும். எனவே, இது போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அமைதியாக வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நிம்மதியை எனது இனிய நண்பர் ஆறுமுகம் தொண்டமான் கெடுத்து விடக் கூடாது. தனது சுயநலத்திற்காக தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைக்க முயற்சிப்பது துரோகச் செயலாகும்.
இரத்நாயக்க சுயநலத்துக்காக சொன்னாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. தொண்டைமானும் அவருடைய வாரிசுகளும் பதவிக்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் சேர்வார்கள். ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரித்து விட்டு அவர் தோற்றதும் மகிந்த பக்கம் சாய்ந்து அவரை ஆதரித்து அமைச்சு பதவி பெற முயன்றார்கள். அதில் சிக்கல் என்றதும் அரசை பயமுறுத்த புலிகளை சந்திக்கிறார்கள்.
Quote:இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் தொழிலாளர்களின் தலைவர்களே அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், இன்றுவரை தோட்டத் தொழிலாளர்கள் எட்டடி லயன் காம்பராக்களிலேயே வாழ்கின்றனர்.
ம் இவர்கள் அமைச்சு பொறுப்பில் இருந்து தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைத்தாக தெரியலை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

