Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி
#3
பிந்திய செய்தி

சிறிலங்கா கடற்படையினரின் வாகனத் தொடரணி பேசாலை பகுதியில் கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளானதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.


மன்னாரிலிருந்து வடமேற்கில் 15 கிலோ மீற்றர் தொலைவில் பேசாலைக்கு அருகில் துள்ளுக்குடியிருப்பு என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.

தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கடற்படையினர் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 4 கடற்படையினர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 13 கடற்படையினர் அனுராதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

"கொல்லப்பட்ட கடற்படையினர் குறித்து சரியான எண்ணிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. இதுவரை நாம் 12 சடலங்களை மீட்டு உள்ளோம்" என்று சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் ஜயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

"நேற்று சண்டை நடந்த பகுதிக்கு அருகாமையில்தான் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது பேரூந்திலும் இராணுவ வாகனத்திலும் சுமார் 30 கடற்படையினர் இருந்ததாகவும் பேரூந்து முற்றாக தீப்பிடித்துள்ளதாகவும் இராணுவ வாகனத்துக்கும் சேதங்கள் எற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தற்போது மீட்புப் பணிக்காக மேலதிக கடற்படையினர்இ இராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:16 AM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 12-23-2005, 11:50 AM
[No subject] - by மின்னல் - 12-23-2005, 01:40 PM
[No subject] - by cannon - 12-23-2005, 02:21 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 03:59 PM
[No subject] - by sanjee05 - 12-24-2005, 02:21 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 06:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)