![]() |
|
பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி (/showthread.php?tid=1855) |
பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி - நர்மதா - 12-23-2005 மன்னார் பேசாலைப்பகுதியில் சிறீ லங்கா கடற்படையினர் பயணம் செய்துகொண்டிருந்த டிரக் மற்றும், பேருந்து வாகனங்கள் மீது மதியம் 1.30 அளவில் கிளைமோர்த்தாக்குதல். நடத்தப்பட்டது. இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் காரணமாக கடற்படையினரின் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், கடற்படையினரில் 06 பேர் பலியாகியும் 15 பேர் காமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த கடற்படையினர் சிறீ லங்கா விமானப்படையினரின் உலங்கு வானூர்தி மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பதட்டம் நிலவுவதாகவும், பெருமளவிலான இராணுவத்தினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சங்கதி - நர்மதா - 12-23-2005 நேற்றும் நெல்லியடியில் கிளைமோர்தாக்குதல் நடாத்தப்பட்டதாம் மயிரிலையில் தப்பிவிட்டார்களாம் என்னவோ அவர்களின் நல்ல காலம் தப்பிவிட்;டார்கள் - நர்மதா - 12-23-2005 பிந்திய செய்தி சிறிலங்கா கடற்படையினரின் வாகனத் தொடரணி பேசாலை பகுதியில் கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளானதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர். மன்னாரிலிருந்து வடமேற்கில் 15 கிலோ மீற்றர் தொலைவில் பேசாலைக்கு அருகில் துள்ளுக்குடியிருப்பு என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கடற்படையினர் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 4 கடற்படையினர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 13 கடற்படையினர் அனுராதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "கொல்லப்பட்ட கடற்படையினர் குறித்து சரியான எண்ணிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. இதுவரை நாம் 12 சடலங்களை மீட்டு உள்ளோம்" என்று சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் ஜயந்த பெரேரா தெரிவித்துள்ளார். "நேற்று சண்டை நடந்த பகுதிக்கு அருகாமையில்தான் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது பேரூந்திலும் இராணுவ வாகனத்திலும் சுமார் 30 கடற்படையினர் இருந்ததாகவும் பேரூந்து முற்றாக தீப்பிடித்துள்ளதாகவும் இராணுவ வாகனத்துக்கும் சேதங்கள் எற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தற்போது மீட்புப் பணிக்காக மேலதிக கடற்படையினர்இ இராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். புதினம் - vasisutha - 12-23-2005 narmatha34 Wrote:நேற்றும் நெல்லியடியில் கிளைமோர்தாக்குதல் நடாத்தப்பட்டதாம் மயிரிலையில் தப்பிவிட்டார்களாம் என்னவோ அவர்களின் நல்ல காலம் தப்பிவிட்;டார்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மின்னல் - 12-23-2005 புங்குடுதீவில் இளையதம்பி தர்சினி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்தமைக்காக கடற்படையினருக்கு கொடுக்கப்பட்ட முதல் தண்டனை. அப்பாவி மக்கள் மீது இராணுவ வன்முறை பிரயோகிக்கப்பட்டால் இதே முறையில்தான் எம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை யாழ்ப்பாணத்திலும் இன்று மன்னாரிலும் நடந்த தாக்குதல்கள் பறை சாற்றுகின்றன. இதேநிலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை வவுனியா மாவட்டங்களிற்கும் பரவும் காலம் வெகு தொலைவில் இல்லை. - cannon - 12-23-2005 "விதைத்தவர்களுக்கு, இது அறுபடைகளின் தொடக்க காலம்" நேற்று "கவுசல்யன், சேனாதி, பாவாஅண்ணர், ...." என்று "கருணா எனும் எச்சிலிலைக்கூலியின் பெயரில்" நடாத்தப்பட்ட நாடகங்களின் கிளைமாக்ஸ்ஸுகள்!! அதிர்ச்சியில் அரசுத்தலைவர் - கொழும்பில் அவசரக்கூட்டம் - Vaanampaadi - 12-23-2005 அதிர்ச்சியில் அரசுத்தலைவர் - கொழும்பில் அவசரக்கூட்டம் Written by Pandara Vanniyan Friday, 23 December 2005 மன்னாரில் இடம்பெற்ற சம்பவத்தினைத் தொடர்ந்து அவசர அவசரமாக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சில் இராணுவ அதிகாரிகளுடன் விசேட கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார் முக்கியமாக மன்னாரில் கடற்படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள பதட்ட நிலைமை தொடர்பாக இந்தக் கூட்டத்திலே ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் மன்னாரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றாலும் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக வேகமாக ஆராய்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடததக்கது. Sankathi மன்னார்; பொங்கியெழும் மக்கள் படை அறிக்கை - Vaanampaadi - 12-23-2005 தர்சினியின் படுகொலைக்கான பதிலடியே இன்றைய கடற்படையினர் மீதான தாக்குதல் - மன்னார் மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை Written by Paandiyan Friday, 23 December 2005 புங்குடுதீவில் கடற்படையினரால் இளையதம்பி தர்சினி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாகவே இன்று மன்னாரில் கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம்: -------------------------------------------------------------------------------- பொங்கியெழும் மக்கள் படை - மன்னார் மாவட்டம். இனவெறி ஆக்கிரமிப்புப்படைகளே! 17.12.2005 அன்று யாழ் ஊர்காவல்துறையில் சகோதரி தர்சினி கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதற்கு, யாழ்மாவட்ட பொங்கியெழும் மக்கள் படைக்கு கரம்கொடுக்கும் முகமாக இத்தாக்குதல் ஓர் இறுதி எச்சரிக்கையாக கடற்படையினர் மீது நடாத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் எமது தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இராணுவ அட்டூளியங்களுக்கு இது போன்ற பாரிய அழிவுகளை சிறீலங்காப்படைகள் சந்திக்;க நேரிடும் என எச்சரிக்கின்றோம். நன்றி பொங்கியெழும் மக்கள்படை, மன்னார் மாவட்டம். Sankathi Re: மன்னார் மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை அறிக்கை - தூயவன் - 12-23-2005 தொடங்கீட்டாங்கையா!! தொடங்கீட்டாங்க!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-23-2005 cannon Wrote:"விதைத்தவர்களுக்கு, இது அறுபடைகளின் தொடக்க காலம்" சரியாச் சொன்னியள்!! "விதை விதைத்தவன் விதை அறுப்பானாம்" - sanjee05 - 12-24-2005 இது தொடக்கம் உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - Mathan - 12-26-2005 சர்வதேச சமூகத்துடனான புலிகளின் உறவைச் சிதைக்க சிறிலங்காவின் புதிய சதி சர்வதேச சமூகத்துடனான தமிழீழ விடுதலைப் புலிகள் உறவைச் சிதைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் புதிய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. புங்குடுதீவு தர்சினியின் பாலியல் படுகொலைக்கு எதிர்வினையாக மன்னாரில் பொங்கியெழும் மக்கள் படையினரால் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை வைத்து புதிய இராஜதந்திர சதித் திட்டத்தை நகர்த்த சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் பேசாலைத் தாக்குதலில் உலக அளவில் தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதல்நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று மன்னார் சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி சுதத் அசமதல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவ்த்துள்ளார். இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளர் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்தக் கதையை சோடனை செய்வதற்காகஇ கைக் குண்டுத்தாக்குதல்களால் மனித உடல்கள் இப்படி சிதையாது என்றும் அனைத்துலக நாடுகள் தடை செய்த தெர்மொபெரிக் ரக ஆயுதங்களை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தினார்கள் என்றும் புதிய விளக்கங்களையும் அவர் அளித்துள்ளார். நேர்மைப் பேச்சுகளில் நம்பிக்கையின்றிஇ சர்வதேச சமூகத்திடம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்ற புதிய கதையை அவிழ்த்துவிட சிறிலங்கா அரசாங்கம் தயாராக வருவதையே இந்தச் செய்திகள் சுட்டிக்காட்டுவதாக கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். புதினம் - MUGATHTHAR - 12-26-2005 Quote:மன்னார் பேசாலைத் தாக்குதலில் உலக அளவில் தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதல்நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன அட........கறுமாந்திரம் பிடிச்சவங்களே அமெரிக்கா காரன் ஈராக்கிலை நுளையிறத்து எடுத்த விளையாட்டை இப்ப நீங்களும் எடுக்கப்பாக்கிறீயள் போலக்கிடக்கு..............சரி எப்பிடி யெண்டாலும் எடுத்து ஒரு முடிவுக்கு வாங்கோ அமெரிக்காகாரன் ஆப்பிழுத்த குரங்காட்டம் ஈராக்கிலை நுளைஞ்சிட்டு படுகிற பாடு உங்களுக்கு தெரியும்தானே.................பிறகு சொல்லேலை எண்டு சொல்லப்பிடாது |