12-23-2005, 11:06 AM
மன்னார் பேசாலைப்பகுதியில் சிறீ லங்கா கடற்படையினர் பயணம் செய்துகொண்டிருந்த டிரக் மற்றும், பேருந்து வாகனங்கள் மீது மதியம் 1.30 அளவில் கிளைமோர்த்தாக்குதல். நடத்தப்பட்டது. இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் காரணமாக கடற்படையினரின் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், கடற்படையினரில் 06 பேர் பலியாகியும் 15 பேர் காமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த கடற்படையினர் சிறீ லங்கா விமானப்படையினரின் உலங்கு வானூர்தி மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் பெரும் பதட்டம் நிலவுவதாகவும், பெருமளவிலான இராணுவத்தினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சங்கதி
சங்கதி

