12-14-2003, 05:55 PM
புலம் பெயர் மண்ணில் அதுகும் அதி கூடிய உறை நிலைக்காலங்களில் வாழும் நாம் முற்று முழுதாகவே தேங்காயை தவிற்பது நன்மை தரும். சம்பல் சட்னி புட்டுக்கு போடுதல் கீரைக்கு கூட்டரைத்தல் என பல தேவைகளிற்கு தேங்காயை பாவிக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.பலரை நான் பாற்திருக்கிறேன் .சுவிற்சலாந்தில் அனேகர் தேங்காயை வாங்கி துருவி குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைத்துப்பாவிக்கிறார்கள்.அம்மாடியோவ். சொன்னால் யார் புரிந்து கொள்கிறார்கள். நோய் வந்தால் தான் புரிந்து கொள்வதற்கு சந்தற்பமா? கடவுளே. முக்கியமாக கோவில்களுக்கு அருகில்வாழ்வோர் வாரம் தோறும் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து விட்டு அந்த தேங்காயை துருவி வைத்தக்கொள்கிறார்கள். ஒரு முறை தமிழ் கடை ஒன்றிற்கு சென்ற போது அந்த தமிழ் கடைக்கு அருகில் இருப்பவர் ஓடி வந்து சம்பலரைக்கவாம் வீட்டுக்காறி என ஒரு தேங்காய்க்காக கடை வந்து வாங்கிப்போனதையும் கண்டேன். மருத்துவம் பற்றிய அறிவை அதிகம் கொடுக்க வேண்டியவர்களாக புலம்பெயர் தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது அவர்களின் பணி. இந்த பணியை யார் செய்யப்போகிறார்களோ.???!!!!!
[b]Nalayiny Thamaraichselvan

