12-22-2005, 11:23 PM
<b>வட இலங்கையில் தொடரும் வன்முறைகள்</b>
இலங்கையின் வடக்கே அரச படைகள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
மன்னார், யாழ்ப்பாணம், ஆகிய நகரப்பகுதிகளில் பதட்டம் நிலவுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பொலிசார் காயமடைந்தனர். யாழ் மாவட்டத்தில் படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் வடக்கே மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இன்று காலை 7.30 மணியளவில் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ரோந்நு படகுகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 3 கடற்படையினரைக் கடத்திச் சென்றிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுக்காவல் நடவடிக்கையை முடித்துக் கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு படகுகளில், ஒரு படகில் இருந்த மூவரே கடத்திச் செல்லப்பட்டதாகவும், மற்ற படகில் இருந்த மூவரும் கடலில் பாய்ந்து தப்பியபோது கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் குழுவினரே இதனைச் செய்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய மன்னார் பள்ளிக்குடா கடற்பகுதியில் கடற்புலிகளின் படகொன்றை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் தாக்க முற்பட்டபோது, தற்காப்புக்காகப் புலிகள் திருப்பித் தாக்கியதில் தமது தரப்பில் ஒருவர் காயமடைந்ததாகவும், இந்த மோதலின்போது காயமடைந்த கடற்படைச்சிப்பாய் ஒருவர் தங்களிடம் பிடிபட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
பள்ளிமுனை கடலோரத்தில் கடற்படை முகாமருகில் நடைபெற்ற இந்தச்சம்பவத்தில் கடற்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
<b>இதன்போது ருக்மன் பிகராடோ என்ற மீனவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நடைபெற்ற தேடுதலின்போது, சந்தேகத்தின் பேரில் 9 பேரைக் கடற்படையினர் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</b>
இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மன்னார் நகரப்பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடத்திய எச்சரிக்கை வேட்டுக்களையடுத்து, பதட்டம் ஏற்பட்டது.
நகரில் திறந்திருந்த கடைகள் அலுவலகங்கள் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடின.
<b>இதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் நேரடியாக மன்னார் கடைவீதி மற்றும் பள்ளிமுனை பகுதிகளுக்குச் சென்று படை அதிகாரிகள் மற்றும் போர்நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, பொதுமக்களுக்குப் பாதிப்பு எற்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார். </b>
இதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பொலிசார் காயமடைந்ததாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
கந்தர்மடம் அரசடிச் சந்தியில் இன்று நண்பகலளவில் நடைபெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ற் ஒருவர் காயமடைந்ததையடுத்து, படையினர் திருப்பித் தாக்கியதில் சிவிலியன்களான இரண்டு பெண்கள் காயமடைந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் ஐந்து சந்தி பகுதியில் இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது படையினரும் திருப்பிச் சுட்டுள்னனர்.
சில நிமிடங்களுக்குத் தொடர்ந்த இந்தச் சம்பவத்தையடுத்து கனரக வாகனங்களில்; வேகமாக அப்பிரதேசத்திற்கு விரைந்த மேலதிக இராணுவத்தினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்து, சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது வீதியில் சென்ற பலரும் தாக்கப்பட்டதாகவும், முச்சக்கர வண்டியொன்று சேதமடைந்ததாகவும், இதனால் யாழ் நகரக்கடைகள் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ் நகரில் உள்ள தினசரி அலுவலகம் ஒன்றிற்குச் செய்தித்தாள் பெற்றுக் செல்வதற்காகச் சென்ற கே.நவரட்ணம் என்ற பகுதிநேர பத்திரிகை விற்பனையாளர் அடையாளம் தெரியாத ஆயதபாணிகளினால் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர் தமிழ் தேசிய எழுச்சிக்குழுவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ்
[size=16]<b>சிங்கள அரசுடன் இணைந்து இந்திய ஊடகங்கள் செய்தித் திரிபு..! அம்பலமாகும் உண்மைகள்..!
சிறைபிடிக்கப்பட்டது புலிகள் அல்ல.. பள்ளிமுனை வாழ் அப்பாவி மக்கள்..! அவர்களை விடுவிக்க மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது..!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>