Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை
#7
தற்காப்புக்காக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிறிலங்கா கடற்படையினர் பலி: தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் மன்னார் கடலில் பயணித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பாதுகாப்புக்காக மேற்கொண்ட தாக்குதலில் மூன்று கடற்படையினர் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒரு கடற்படைச் சிப்பாயை உயிருடன் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கு அறிவித்துள்னர். விடுதலைப்புலிகள் மூன்று கடற்படையினரைக் கடத்தி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் முழு விபரம் வருமாறு:-

கிளிநொச்சி
டிசம்பர் 22 2005

திரு. ஹக்ரப் கொக்லன்ட்
கண்காணிப்புக்குழுத் தலைவர்

அன்புள்ள திரு.கொக்லன்ட்

விடயம்: மன்னார் கடலில் இடம்பெற்ற சம்பவம்
டிசம்பர் 22 2005 அதிகாலையில் மன்னார் கடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முழுமையான விபரங்களை வழங்குவதற்காக இக்கடிதத்தினைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.

சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான எமது படகுகள் தாமதமாகவே கரையை வந்தடைந்தாலும் இத்தாக்குதலில் உயிர் தப்பிய எமது அங்கத்தவர்களிடமிருந்து முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாலும் எம்மால் உரிய நேரத்தில் இச்சம்பவம் தொடர்பான தகவலைத் தரமுடியாமற் போய்விட்டது.

எமது மூன்று படகுகள் மன்னார் கடலில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அப்படகுத் தொகுதியினை வழி மறித்த சிறிலங்கா கடற்படை அதன்மீது தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் தற்காப்புக்காக எமது போராளிகள் திரும்பித் தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடற்படைப் படகுகள் பின்வாங்கிச் சென்றபோது ஒரு படகு தரித்து நிற்பதை எமது போராளிகள் அவதானித்தார்கள். அப்படகு நகராமல் நின்றமையினால் அப்படகை அண்மித்த எமது போராளிகள் அப்படகில் ஏற்பட்ட சேதம் காரணமாக அப்படகு கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததையும் அதில் இரண்டு படையினர் இறந்திருந்ததையும் ஒரு படைவீரர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் இருப்பதைக் கண்டார்கள்.

மூழ்கிக்கொண்டிருந்த கடற்படையின் படகினையும் அதிலிருந்த சடலங்களையும் கைவிட்டுவிட்டு காயமடைந்த படைவீரரைக் காப்பாற்றுவதற்குத் தீர்மானித்த எமது போராளிகள் ஏற்கனவே கடற்படையின் தாக்குதலால் சேதமடைந்திருந்த எமது படகில் அவரை ஏற்றினார்கள். கடற்படையினரின் தாக்குதலால் கடுமையாகச் சேதமடைந்திருந்த எமது படகில் வேகமாக நீர் புகத்தொடங்கியதுடன் காயமடைந்திருந்த அப்படைவீரருடன் அப்படகு இறுதியில் மூழ்கிப்போனது.

எமது போராளிகள் காயமடைந்திருந்த தம்முடைய போராளி ஒருவருடன் ஒருவாறாக நீந்தி மாலையிலேயே எமது பகுதியினை வந்தடைந்தார்கள். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்குறிப்பிட்ட இத்தகவல்கள் பெறப்பட்டன. இதற்கிடையில் புலிகள் மூன்று கடற்படையினரைக் கடத்தி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கண்காணிப்புக்குழுவிற்கும் ஊடகங்களுக்கும் விரைவாக அறிவித்தது. கடற்படையின் படகில் இருந்து மூன்று கடற்படையினரும் கடலில் மூழ்கிவிட்டதை எமது போராளிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இது தொடர்பில் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்விற்கு அமைவாக தரையிலும் கடலிலும் எமது அங்கத்தவர்கள் பயணம் செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தரும்படி நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதை இங்கு குறிப்பிடுவது முக்கியமானதாகும். மேலும் எமது போராளிகள் தற்காப்புக்கான ஆயுதங்களுடன் கடலில் இப்பயணத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்பதையும் எதிர்காலத்தில் பயணத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான எமது கோரிக்கைக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவேண்டியது அவசியம் என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். உத்தியோக பூர்வமான ஒழுங்குபடுத்தலை வழங்குவதில் காட்டப்படும் விரைவான நடவடிக்கை இப்படியான சம்பவங்கள் மீள இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள
சு.ப. தமிழ்ச்செல்வன்
பொறுப்பாளர்
அரசியல்துறை.

நன்றி
லங்காசிறி
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 12-22-2005, 09:33 AM
[No subject] - by sri - 12-22-2005, 09:35 AM
[No subject] - by தூயவன் - 12-22-2005, 02:53 PM
[No subject] - by நர்மதா - 12-22-2005, 10:11 PM
தற்காப்புக்காக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் - by நர்மதா - 12-22-2005, 10:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)