Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#2
இந்திய உறவு: புதிய பாணியிலான இராஜதந்திர நகர்வு
சுதர்மா - கனடா


இந்தியாவுடனான உறவுப் புதுப்பித்தலுக்கு தமிழர் தரப்பு வேண்டுகோள் விடுத்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், இந்திய மத்திய அரசானது தமிழர் தரப்பிற்கு எதிரானவர்களால் இரண்டு வகையான அழுத்தங்களைப் பெறுகிறது. தமிழர் தரப்புடனான பொருதுதலை ஏற்படுத்து முகமாக, திருமலை பற்றி வலிந்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் சிறீலங்கா சார்ந்த தரப்பால் முன்னெடுத்துச் செல்லப்பட, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்த விவகாரம் இந்தியாவிலுள்ள தமிழின எதிர்ப்பாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

தமிழீழக் கடற்பரப்பில் மீன்;பிடியில் ஈடுபட்டதோடு மீனவர்களின் வலைகளையும் அறுத்தெறியும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த 32 மீனவர்கள் அப்பகுதி மீனவர்களால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மேற்படி மீனவர்கள் விடுதலையானவுடன், தாங்கள் விடுதலைப் புலிகளின் தலையீட்டாலே விடுதலையானதாக இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவோ, மீனவர்களைக் கைது செய்த விடுதலைப் புலிகளை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளார்.

அதுபோன்றே, கொழும்பில் சந்திரிகா சார்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கை இந்திய இராஜதந்திரப் பேச்சுகள்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய முன்னைநாள் இந்திய வெளியுறவுச் செயலர் ராஜ் சோத்ரா மற்றும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரான பேராசிரியர் எஸ்.டி. முனி ஆகியோர் தமிழர் தரப்பின் கடற்படை பற்றிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியதுடன், இந்திய மீனவர்களைக் கைது செய்வது போன்ற செயல்களின் மூலம் இந்திய அரசைக் கோபமடைய வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற தொனியில் எச்சரித்துள்ளனர்.


இன்றுவரை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 200 மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையால் கொல்லப்பட்டது பற்றி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத மேற்படி நபர்கள் இந்தியாவின் சார்பாக பேசும் அதிகாரத்தை கொண்டிராதவர்கள் என்பதோடு, சிறீலங்காவின் இனவாத தலைமைக்குச் சார்பானவர்கள். இப்போது இவர்களால் விவகாரமாக்கப்பட்டுள்ள மீனவர்களோ தமது விவகாரத்தில் தலையிட்டு தாம் விடுதலையடைய வழிவகுத்ததிற்காக தமிழர் தரப்பிற்கு நன்றி தெரிவிக்க, இவர்களோ எந்தவித உண்மையுமற்ற கருத்து வெளிப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே இவ்விவகாரம் மிகவும் திட்டமிட்டே பெரிதுபடுத்தப்படுகிறது என்ற உண்மையை உள்வாங்கியதாகவே தமிழர் தரப்பின் இந்திய உறவு புதுப்பித்தல் மற்றும் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் தொடர்பான கோரிக்கை என்பன வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தற்போது இந்தியாவின் பங்கிற்கான சாத்தியம் இல்லையாயினும், சிறீலங்காவின் கருத்துக்களை இந்தியா எழுந்தமானமாக உள்வாங்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இப்போதைய தமிழர் தரப்பின் வேண்டுகோள் அமைந்துள்ளது.

சிறீலங்காவின் தற்போதைய அணுகுமுறையைப் பற்றிய ~உண்மைமுகம்| ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி டில்லியில் வைத்து கதிர்காமரால் வெளியிடப்பட்டது. ரணில் சார்ந்த ஐக்கிய தேசிய முன்னணியும் இதே பாணியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றாலும், அதனை நேரடியாகவே வெளிப்படுத்தியது சந்திரிகா தரப்பே. குறிப்பாக ஜப்பான் சமாதான நடவடிக்கையில் தீவிரமாகப் பங்களிப்பதை இந்தியா விரும்பவில்லையென்று தெரிவித்த கதிர்காமர், தமிழர் தரப்பின் செயற்பாடுகள் குறித்து தான் இந்தியாவிற்கு எடுத்துக் கூறியதாகவும், இந்த ஆபத்துக் குறித்து இந்தியா இப்போது விழிப்படைந்திருக்குமென்றும் கூறியிருந்தார்.

அத்தோடு, பாக்கு நீரிணையில் இந்திய-இலங்கைக் கடற்படைகளுக்கு போட்டியாக புலிகளின் கடற்புலிகளையும் அனுமதிப்பதிலுள்ள ஆபத்தை இந்தியக் கடற்படை நன்றாக உணர்ந்திருந்தாலும், இந்தியாவின் அரசியல் தலைமைப் பீடத்திற்கு நிலைமையின் தார்ப்பரியம் சென்றடைய நீண்ட காலம் செல்லும் என்ற காரணத்தால், இந்த ஆபத்தான நிலையை புதுடில்லியின் அரசியல் தலைமைக்கு எடுத்துக் கூறவே தனது டில்லிக்கான பயணம் எனத் தெரிவித்ததோடு, இது தொடர்பாக தான் வழங்கிய விளக்கத்தை இந்திய தரப்பினர் விளங்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கும் மேலாக, இனப்பிரச்சினைக்கு சட்ட ரீதியில் எந்த வகையான தீர்வுகள் காண முடியும் என்பது பற்றி இந்தியா தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இலங்கையில் புதிய நாடொன்று உருவாவதை இந்தியா பார்க்க நேரும் என்றும் தெரிவித்ததோடு, புலிகள் இந்தியாவைப் பற்றி பெரிதும் கவலைப்படுகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. இந்தியாவுடன் நட்புடன் இருக்க பிரபாகரன் விரும்புவதாக கூட நான் கேள்விப் பட்டேன். அதனால்தான் கடந்த கால தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என புலிகள் விரும்புகின்றனர் என ஊகம் தெரிவித்திருந்தார் கதிர்காமர்.

கதிர்காமரின் இக்கூற்றில் இந்தியாவை மீண்டும் நுழைய வைப்பதற்கான அம்சங்களே முற்றாக அடங்கியிருந்தன. அதுகூட சிங்களம் சார்ந்த ஒரு தரப்பாக இந்தியா உள்நுழைய வேண்டும் என்பதற்கான தரவுகளைத் தன்னகத்தே கொண்டதாகவும், ஜப்பான், நோர்வேயின் பங்காற்றுகையைக் குறைத்து இந்தியாவின் கைகளில் இனப்பிரச்சினை மீண்டும் பாரப்படுத்தப்பட வேண்டும் என்பதாகவும் அது அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சர்வதேச அக்கைறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசும், அதுசார் இந்திய விசுவாசிகளும் இறங்கியுள்ளனர்.


இதனைத் இந்தியத் தரப்பிற்குத் தெளிவுபடுத்துவதாகவே 'இந்தியாவையும், புலிகளையும் முரண்பட வைப்பதற்கு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாத சக்திகள் விரும்புவதாகவும,; அந்தத் தூண்டுதலுக்கு இந்திய அரசு இரையாகக்கூடாது என்றும், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்களிப்பினை வழங்குவதாயின் புலிகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதுடன் புதிய அணுகுமுறையையும் கைக்கொள்ள வேண்டும்" என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விடுத்த வேண்டுகோள் அமைந்திருந்தது.

2000ம் ஆண்டின் பின்னான இந்தியச் செயற்பாடுகள் மென்மைப் போக்குடையதாக இருந்தன. குறிப்பாக 2001 யுூன் மாதம் சிறீலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுக்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்திய -ஈழப் போரின் பின்னான புதிய நகர்வாக இது இருந்தது. அதுபோலவே அதன் தொடர்ச்சியாக யுூலை மாதம் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தமிழர் தரப்பால் தாக்கியழிக்கப்பட்ட போது, கண்டனம் தெரிவிக்கும் பாங்கு இல்லாமல், மிகவும் அவதானமான வார்த்தைப் பிரயோகங்களையே இந்தியா தனது அறிக்கையில் மேற்கொண்டிருந்தது.

அதுபோன்றே 2002ன் ஆரம்பத்தில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் மற்றும் நிதி வழங்கும் மாநாட்டில் இந்தியா பங்களிப்பை மேற்கொள்ளும் என வெளியுறவுச் செயலர் கென்வால் சிபால் தெரிவித்திருந்தார். எனினும் தமிழர் தரப்பின் அரசியல் ஆலோசகரின் தமிழீழப் பயணத்திற்கு தென்னிந்தியாவைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்தமை, பல்கட்சி அரசியல் பிரசன்னம், மனிதவுரிமை பேணல் போன்ற அறிவுறுத்தல்களை வெளிப்படுத்தியதோடு இந்தியா பேச்சுக்களின் போக்கில் தலையிடும் ஒரு சக்தியாக இல்லாமல் தானாகவே ஒதுங்கிக் கொண்டது.

குறிப்பாக, தாங்கள் மீண்டும் காவு கொடுக்கப்படாமல் இருப்பதற்கான வழிவகைகளையே இக் காலகட்டத்தில் இந்தியா கையாண்டது. எனினும் இப்பிராந்தியத்திலான சர்வதேசத்தின் பிரசன்னமும் தமிழீழ நிலழரசு அங்கீகாரம் பெறும் தன்மையும் இந்தியப் போக்கில் இப்போது மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றன. குறிப்பாக கடற்புலிகளின் வளர்ச்சி பற்றிய அதிகளவு பயத்தை வாங்கிய தரப்பாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது என்பதை, ஒரு நாட்டிற்குள் இரண்டு கடற்படைகள் கூடாது என்று இந்தியப் பாதுகாப்பமைச்சர் கூறியுள்ளது எடுத்தியம்புகிறது.

அதுதவிர இந்திய அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துவதை ஒருபுறமாகவும் பாதுகாப்புத்துறை, கடற்கண்காணிப்பு சார் உதவிகள், பேச்சுத் தரப்புகளிற்கான மறைமுக அழுத்தங்கள், எதிரணிகளிற்கான ஆதரவு, பிராந்திய நலன்பேண் செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்வதை இன்னொரு புறமாகவும் மேற்கொள்ளும் சாத்தியத்தைப் பெற்றுள்ளதொரு நிலையிலேயே தமிழர் தரப்பின் மீள்பரிசீலனைக்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்தியா முன்னரைப் போல இலங்கைத் தீவு தொடர்பான பிரச்சினையில் நேரடித் தலையீட்டை இப்போது விரும்பவில்லை. தமது நாட்டின் பாதுகாப்புத் தேவைகளிற்கு படைபலம் தேவையாக உள்ளது என்பதற்காக ஈராக்கியப் போருக்கு துருப்புக்களை வழங்க முன்வராத இந்தியா, இலங்கைத் தீவில் மீண்டும் போர் ஏற்பட்டாலும் இராணுவ ரீதியாகத் தலையிடும் எண்ணத்தை நியாயப்படுத்த முடியாத ஒரு தரப்பாகவே உள்ளது. எனவே பேச்சுக்களின் போதான சர்வதேசத்தின் பங்காற்றலைக் குறைப்பதற்கான செயற்பாடுகளே அதற்கான எஞ்சியுள்ள தெரிவு.

பல்வேறுபட்ட தெரிவுகளைப் பரிசீலனை செய்ய வேண்டியதொரு நிலையில் இந்தியா உள்ளதொரு காலகட்டத்திலேயே தமிழர் தரப்பின் இந்தியாவிற்கான வேண்டுகோள் வெளிப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாடு பற்றி அறிவிக்கும் சாத்தியக்கூறுகள் எதுவும் தற்போது இல்லாததொரு நிலையில், இரண்டாந்தர இராஜதந்திரிகளின் கருத்து வெளிப்பாடுகளையும், பரப்புரைகளையும் நாம் கவனத்திலெடுக்க முடியாது. ஆனால் இந்தியாவிற்கு தமிழர் தரப்பின் செய்தி, நிலைப்பாடு என்பன தகுந்ததொரு காலத்தில் தெளிவாகக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: தமிழ்நாதம்.
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)