12-22-2005, 04:31 PM
<b>ஜனவரி 7 தேவன் நாயருக்கு நினைவஞ்சலி</b>
தேசிய தொழிற்சங்கக் காங் கிரஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி தேவன் நாயருக்கு நினைவஞ்சலி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
என்டியுசியின் தலைமைச் செயலாளரான லிம் பூன் ஹெங், இன்றைய நம்முடைய வெற்றிக்குத் தேவன் நாயரும் அப்போது பணி ஆற்றியவர் களும் காரணம் என்றார்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் தேவன் நாயருக்கு நடத்தப்படும் நினைவு அஞ்சலி பற்றி குறிப்பிட்ட திரு லிம், அதனை ஜனவரி ஏழாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது பற்றி அவரது குடும் பத்தினரிடம் கலந்து ஆலோசிக் கப்படும் என்று சொன்னார்.
என்டியுசி நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
அங்குதான் திரு நாயர், தொழிற்சங்க ஊழியர்களுக்காக பல முறை உரை நிகழ்த்தியிருக் கிறார். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முன் னோடித் தலைவரான திரு தேவன் நாயர் இம்மாதம் 7ம் தேதி கனடாவில் காலமானார்.
திரு தேவன் நாயர் 1981ம் ஆண்டு முதல் 1985 வரை அதிபராக இருந்தவர். 1961ம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைமைச் செய லாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரு தேவன் நாயர்.
<span style='color:brown'><b>அமரர் தேவன் நாயருக்கு இரங்கல்</b>
சிங்கப்பூர் உருவாக்கத்தில் பங்காற்றிய முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் தேவன் நாயரின் மறைவு குறித்து அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் உருவாக்கத்தில் குறிப்பாக, தொழிற்சங்க அமைப்பின் உருவாக்கத்தில் அவரது முக்கிய பங்களிப்பை தலைவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
அதிபர் எஸ்.ஆர். நாதன், தேவன் நாயரின் மகன் ஜனதாஸ் தேவனுக்கு எழுதிய கடிதத்தில் பல காரணங்களுக்காக சிங்கப்பூர் மக்கள் மறைந்த அமரர் தேவன் நாயரை நினைவில் வைத்திருப்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு கல்விக் கழகம். அவர் உருவாக்கிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மூலம் தம்முடைய அடையாளத்தைச் சிங்கப்பூர் சமூகத்தில் அவர் ஆழப் பதித்துள்ளார். அவர் தம் வாழ்வில் பட்டங்கள் பெறவில்லை என்றாலும் வாழ்நாள் முழுதும் அறிவைப் பெற்றுத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் பணம் சேர்ப்பதில் நாட்டம் கொள்ளவில்லை.
தேசிய தொழிற்சங்க காங்கிரசை உருவாக்கிய காலகட்டத்தில் அவருடன் பணியாற்றிய போது அவருடைய கடின உழைப்பை நான் அறிந்தேன். சுதந்திர சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கச் சின்னமாக அமரர் தேவன் நாயர் தேசிய தொழிற்சங்க காங்கிரசை உருவாக்கினார் என்று அதிபர் எஸ்.ஆர் நாதன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் லீ சியென் லுìங் தேவன் நாயரின் மகனுக்கு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.
திரு நாயர் நவீன சிங்கப்பூரை உருவாக்கு வதில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றி உள்ளார். நாட்டின் உருவாக்கக் காலங்களில் கடப்பாட்டுடனும் தீரத்துடனும் அவர் பணி யாற்றி உள்ளார். அறுபதுகளின் சிரமமான கம்யூனிச காலகட்டத்தில் திரு நாயர் உறுதியுடன் செயல்பட்டார். கம்யூனிச ஆதரவு உடைந்தபோது, அவர் மக்கள் செயல் கட்சியுடன் தொடர்ந்து இருந்தார்.
வாழ்க்கையின் அடிப்படை பொருளாதார உண்மைகளை அவர் தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். தேசிய சம்பள மன்றத்தின் வெற்றிக்கு உதவினார். நாட்டு வளர்ச்சிக்கு தேவன் நாயர் செய்த சேவைகளைச் சிங்கப்பூர் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் லீ அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தேவன் நாயரின் மகன் ஜனதாஸ் தேவனுக்கு எழுதிய கடிதத்தில், தேவன் நாயர் ஓர் அரசியல் போராளி, அறிவாற்றல் மிக்க தலைவர் என்று மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர சிங்கப்பூருக்கு அடித்தளம் அமைத்ததில் அவர் ஆற்றிய பங்கையும் தொழிலாளர் இயக்கத்தில் அவரது பங்களிப்பையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று திரு கோ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ரப்பர் தோட்ட கணக்காளரின் மகன் என்ற தனது வேரை அவர் எப்போதும் மறந்தது இல்லை. கீழ்த்தட்டு மக்களுடன் அவர் தம்மை ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டார். தொழிலாளர்களின் நலவாழ்வு அவருக்கு எப்போதும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுடைய முன்னேற்றத்துக்காக அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார் என்று தேவன் நாயரைப் பற்றி திரு கோ குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் இயக் கத்தில் ஈடுபட்டபோது தான் தேவன் நாயரை முதன் முதலில் நான் சந்தித்தேன். 1977ல் சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனத்தின் இயக்குநராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது தேவன் நாயர் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைப் பொதுச் செயலாளர். அவருடைய பின்னணியைப் பற்றி அறிந்திருந்ததால் அவரிடம் எனக்கு மதிப்புகலந்த அச்சம் இருந்தது. ஆனால் தனது தன்மையான பண்பினால் அவர் என்னுடைய அச்சத்தைப் போக்கினார். ஓராண்டு கழித்து அவர் சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனத்தின் தலைவரானார். நாங்கள் இருவரும் இணைந்து, என்டியுசி பேர்பிரைஸ் உருவாக்கம் போன்ற பல முக்கிய முயற்சிகளில் பணியாற்றியுள்ளோம் என்று திரு கோ நினைவுகூர்ந்தார்.
தேவன் நாயர் 1979ல் ஆன்சன் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, பிரச்சாரத்தில் நான் உதவினேன் என்று குறிப்பிட்ட மூத்த அமைச்சர், அந்த மூத்த அரசியல்வாதியிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன் என்றார் திரு கோ.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமரர் தேவன் நாயருக்குத் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ளது. அவர் ஓர் அணுக்கமான தோழர் - நண்பர் - அதிபர் - தொழிற்சங்கவாதிகளின் முன்னோடி.
சிங்கப்பூரில் நவீன தொழிற்சங்க கொள்கைகளை உருவாக்குவதில் தேவன் நாயர் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளார் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூறியுள்ளது.
நன்றி: தமிழ் முரசு</span>