Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
7 புலிகள் சிறைபிடிப்பு
#1
விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படை பயங்கர சண்டை: 3 வீரர்கள் பலி 7 புலிகள் சிறைபிடிப்பு
டிசம்பர் 22, 2005

கொழும்பு:

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று திடீரென மீண்டும் போர் வெடித்தது.



தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு கடற் பகுதிக்குள் வந்த இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகுகளை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதையடுத்து நடந்த மோதலில் 3 இலங்கை கடற்படையினர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

கடற்படையின் பதில் தாக்குதல் நடத்தி 7 விடுதலைப் புலிகளை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

மன்னார் அருகே தங்களது இரு படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தா பெரைரா கூறினார்.

இதையடுத்து கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், 3 கடற்படையினரை புலிகள் கடத்திச் சென்றதாகவும் கூறிய அவர், அந்த மூவரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது என்றார்.

அதே நேரத்தில் 7 விடுதலைப் புலிகள் தங்களிடம் பிடிபட்டதாகவும் பெரைரா கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், புலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசின் செய்தித் தொடர்பாளரும் நலத்துறை அமைச்சருமான நிமல் சிரிபாலா கூறியுள்ளார்.

நார்வே மத்தியஸ்தத்தில் கடந்த 2002ம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இதன் மூலம் புலிகள் மீறிவிட்டதாகவும் நிமல் சிரிபாலா குற்றம் சாட்டியுள்ளார்.

இத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

நார்வேயில் பேச்சு: ராஜபக்ஷே மறுப்பு

முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடத்தலாம் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இலங்கை அதிபர் மகந்தா ராஜபக்ஷே நிராகரித்திருந்தார்.

பேச்சுவார்த்தைகளை ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தலாம் என ராஜபக்ஷே கூறி வருகிறார். ஆனால், ஆசியாவில் நடத்தலாம் என்ற அதிபரின் கருத்தில் உள் நோக்கமும் சதியும் இருப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் புலிகளின் கோரிக்கையை நிராகரித்து ராஜபக்ஷே நிருபர்களிடம் கூறுகையில்,

ஓஸ்லோவுக்குச் செல்லலாம் என்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் எங்களது நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம். தனது நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளுமாறு ஜப்பான் கூறியுள்ளது. அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், சிலருக்கு இன்னும் மேற்கத்திய மோகம் பிடித்து ஆட்டுகிறது. இதனால் தான் ஓஸ்லோ செல்வோம் என்கிறார்கள். இதை புலிகளும் ஒப்புக் கொள்வார்கள் என்று கருதுகிறேன். இதனால் ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம் என்றார் ராஜபக்ஷே.

இதற்கிடையே அமைதி முயற்சிகளில் நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலையிடுவதை ராஜபக்ஷே விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதை அவர் ராஜபக்ஷே மறுத்துள்ளார். தனிப்பட்ட நபர்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

( நன்றி : தட்ஸ் தமிழ்)
Reply


Messages In This Thread
7 புலிகள் சிறைபிடிப்பு - by Luckylook - 12-22-2005, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-22-2005, 01:21 PM
[No subject] - by Thala - 12-22-2005, 01:38 PM
[No subject] - by Luckylook - 12-22-2005, 02:07 PM
[No subject] - by kuruvikal - 12-22-2005, 11:23 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 04:25 AM
[No subject] - by Nitharsan - 12-23-2005, 06:07 AM
[No subject] - by ஈழமகன் - 12-23-2005, 07:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)