12-13-2003, 12:27 AM
சுதந்திரன் பார்வையில்...
இந்தியா மனமாற்றம் பெறுமா?!
மகாத்மா காந்தியைச் சுட்டவர்களுக்கும், இந்திரா காந்தியைச் சுட்டவர்களுக்கும், ராஜீவ் காந்தியைப் பகிரங்கமாகக் கொல்ல முயன்ற சிங்களச் சிப்பாய்க்கும் மன்னிப்பு வழங்கிய இந்திய அரசு, இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படாத ராஜீவ் காந்தி கொலையில் மட்டும், விடுதலைப் புலிகளை மன்னிக்க மறுப்பது எதற்காக? என்ற ஒரு தெளிவான நேரடிக் கேள்வியை முன்வைத்து, பதிலை ஆராய்ந்தால், இந்தியாவின் புறக்கணிப்புக்கு ராஜீவ் காந்தியின் கொலை நிச்சயமாக அடிப்படைக் காரணமல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புரிந்து விடுகிறது.
ஈழப்பிரச்சனை தீர்வதனால் இந்தியா நன்மையடையுமா?
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு வருடாவருடம் பெருந்தொகைப் பணத்தை பல தேவைகளுக்காகவும் செலவிடுவதனால், ஈழப்பிரச்சனை தீர்வதனால், இந்தியாவின் அநாவசியச் செலவு மீதப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் போர் நடைபெறும் காலத்தில், இந்தியக் கடல் எல்லையில் இரட்டிப்புப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று இந்திய பாதுகாப்பு அதிகாரி சொன்னதை வைத்துப் பார்த்தால், இலங்கையில் அமைதி நிலவுவது கடல் எல்லைப் பாதுகாப்பை இலகுவாக்குகிறது.
ஆசிய பிராந்திய நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகள் மோசமாக இல்லாதவிடத்து, இந்தியா தனது உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகளில் அதிக கவனத்தைச் செலுத்த வாய்ப்பிருப்பதால், மத்திய அமைச்சரவையிலும் ஒரு சாதக நிலையே தெரிகிறது.
ஈழத்தமிழரின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியத் தமிழர்கள் ஆதரவு தர மறுக்கிறார்களா என்று பார்த்தால், அதற்கு முற்றிலும் மாறாக, ஈழத்தவர் இழுபறிகள் தீர்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் வலுவாகக் குரல் கொடுப்பதுடன், பல முக்கியத் தலைவர்களும் சிறையில் அடைபட்டும் அஞ்சாது ஆதரவு தருகிறார்கள்.
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) ஈழத் தமிழர் பிரச்சனை தீருவதை வெறுக்கிறார்களா என்று பார்த்தால், அங்கிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைப்பதுடன், தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவே அவர்கள் பகிரங்கமாக ஆர்வம் காட்டுகிறார்கள்.
உள்நாட்டுப் பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்படுவதற்கு இந்தியா என்றுமே ஆதரவு தந்ததில்லை என்று வாதாடவும் வாய்ப்பில்லை. பங்களாதேஷ், காஷ்மீர், பஞ்சாப், பாக்கிஸ்தான் என்று அத்தனை புூதாகாரப் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதை இந்திய அரசு ஆதரித்தே வந்திருக்கிறது, வருகிறது.
கடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததனால், ஒரு தனிநாட்டுப் பிரிவினையை இந்தியா ஆதரிக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், தற்போது ஒரு நாட்டிற்குள் சமஷ்டித் தீர்வை ஆராயும் வேளையில் இந்தியாவின் இந்த வாதம் ஒவ்வாமற் போகிறது.
இலங்கைப் பிரச்சனை உக்கிரமடைவதால் இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்ற வாதத்தை ஏற்கலாம், ஆனால் இலங்கைப் பிரச்சனை தீர்வதால் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்பதை நியாயப்படுத்த எந்த வாதமும் இடம்கொடுக்கப் போவதில்லை.
ஈழத்தமிழர்கள் இந்திய அரசிடமிருந்தோ, மாநிலங்களிலிருந்தோ ஒரு சிறு நிலப்பரப்பையோ, கடற்பரப்பையோ, பணத்தொகையையோ, படைப்பலத்தையோ, பாதுகாப்பையோ, மக்களையோ, உரிமைகளையோ, ஒப்பந்தங்களையோ, கண்காணிப்பையோ, காவலையோ எதையுமே முன்நிபந்தனையாகக் கேட்கவில்லை, பின்நிபந்தனையாக வைத்திருக்கவும் இல்லை, அத்தகைய தேவைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசையோ விடுதலைப் புலிகளையோ இந்தியா நம்பவில்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்தாலும், இம்முறை மூன்றாந்தரப்பின் வலுவான பின்புலம் இருப்பதுடன், அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, கனடா போன்ற வலுவான பல மேற்குலக நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தருவதனால், இந்தியா அவ்வளவு சுலபமாக ஏமாற்றப்படும் நாடாக மாறிவிட வாய்ப்பில்லை.
பங்களாதேஷ் என்ற ஒரு சிறிய நாட்டிற்கு விடுதலை கொடுத்ததால், இந்தியா என்ற ஒரு வல்லசுக்கு ஆபத்தோ அச்சுறுத்தலோ வந்ததா என்று ஆராய்ந்தால், அதற்கும் இல்லை என்றே விடை கிடைக்கிறது.
ஏன் இந்தக் காழ்ப்புணர்வு?
பால் பொங்கி வரும்போது தாளி உடையப்போகிறதே, காப்பாற்ற மாட்டீர்களா என்று ஈழத் தமிழர்கள், புலம்பெயர் ஈழத்தமிழர்கள், இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் இப்படி அனைவருடனும், விடுதலைப் புலிகளின் தலைமையும் இந்தியாவின் தலையீட்டையும் ஒத்துழைப்பையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவர, இந்தியா மட்டும் பாராமுகம் காட்டுவதன் மர்மம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.
இதைவிட ஒருபடி மேலே சென்று, இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி, இராணுவ முகாம்களும் தளபாடங்களும் புதிப்பிக்க உதவிகள், இருநாட்டுத் தளபதிகளின் சிறப்புச் சந்திப்புக்கள், இராணுவ ஆலோசனைப் பரிமாற்றங்கள், முப்படைத் தளபதி பலகல்லவின் தலைமையில் உயர்மட்ட இராணுவக் குழுவின் இந்தியப் பயணம், இக்குழுவில் துப்பறியும் இராணுவப் பிரிவின் தலைமை பிரிகேடியர் கபில கெந்தவதான உள்ளடக்கப்பட்டிருப்பது என்று இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே எடுத்து வைக்கப்படுகிறது.
ஒன்றுபட்டு இயங்கி வந்த தமிழர் தேசிய கூட்டமைப்பையும் பலமான அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் பிரித்து உடைத்து, இந்தியாவுக்கே உரித்தான உட்கட்சிப் புூசலைக் கிழப்பும் பண்பிலும் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் கறாராகத் தடைசெய்து ஒதுக்கிவரும் இந்தியா, ஈழத்தமிழரைக் காக்க மறந்து ஓடித்தப்பிய ஏனைய தலையாட்டிக் குழுக்களுக்கெல்லாம் பாதுகாப்பும் தங்குமிட வசதிகளும் வழங்குவதுடன், நாடு முழுவதும் சுதந்திரமாகப் பயணிப்பதை அனுமதிக்கிறது. அண்மையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் தமிழ்நாட்டின் அகதிமுகாமிலிருந்து சிலரை அழைத்துவந்து, ஊர்காவற்றுறையில் அவர்கள் அமைத்துள்ள பயிற்சி முகாமில் பயிற்சிக்குச் சேர்த்து வந்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தியா இதுகுறித்து ஆராயவோ கருத்துக் கூறவோ மறுத்து விட்டது.
ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்யும் பொடாச் சட்டம்
ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னர், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இந்திய மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்தபோது, அதே ஆதரவை வழங்கியவர்களில், தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க ஜெயலலிதா பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தும், புதுடில்லி கண்மூடியே காட்சி தருகிறது. ஒரு வைகோவோ நெடுமாறனோ சுபவீரபாண்டியனோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஆயிரம் பிரபலங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்து எத்தனையோ மேடைகளில் குரல்கொடுத்திருந்தும், ஜெயலலிதா தனது எதிரிகளை மட்டுமே பழிவாங்கியிருப்பது, இந்திய அரசுக்கு மிகக் கேவலமான ஒரு பெயரையே பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தக் காலகட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாகூட, விடுதலைப் புலிகளை ஆதரித்துத்தான் மேடைகளில் முழங்கி வந்தார் என்பதை அவரது உரையின் ஒலிநாடாக்களைக் கேட்டு அறிந்து கொள்ள, பொடா வழக்கை ஆராயும் நீதிபதிகளுக்கு எத்தனை மணித்துளிகள் தேவைப்படப் போகிறது?!
இந்தியா மனம் வைக்குமா?
ஆக, ஈழத்தமிழர்கள் விடுதலைபெற்று வாழ்வதற்கான பரிநாண் கயிற்றைத் தன்கையில் வைத்திருக்கும் இந்தியா, மனம் வைத்தால் நிட்சயம் இலங்கைப் பிரச்சனையில் தனது கொள்கையை சற்றே இறக்கிக் கொள்ளலாம்.
இலங்கைத் தலைமையில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருப்பதுடன், நிரந்தர சமாதானம் உருவாகக்கூடிய இறுதி வாய்ப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும் ஆலோசகருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் நேரடியான அழைப்பை ஒரு கௌரவ வரவேற்பாகக் கருதி, வீசப்பட்டுள்ள துருப்பைக் கெட்டியாகப் பிடித்து இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக விரிந்து கிடக்கிறது.
ரணில்-சந்திரிகா-விடுதலைப் புலிகள்-இந்தியா என்ற நாற்கோணச் சந்திப்பொன்றை, நோர்வே-ஜப்பான் மத்தியஸ்தத்தில் அமைத்துக்கொடுத்து, இலங்கை என்ற நாட்டிற்கு ஓர் நிரந்தரத் தீர்வை வழங்க இந்தியா முன்வருமா?
இந்த உலக வரலாறு படைக்கக்கூடிய சந்திப்பை, ஈழத்தமிழர்கள் என்றுமே மறக்கமுடியாத திம்பு நகரில் அமைத்துக் கொடுத்து இந்தியா தன் நீண்டகாலக் கறைகளைக் கழுவிக் கொள்ளுமா??
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 12.8 )
நன்றி: கனடா சுதந்திரன் 11-12-03 & தமிழ்நாதம்.