Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று கா.வே.பாலகுமாரன் அவர்களின் உரை
#2
மூன்றாவது சுனாமி வரப்போகிறது- அது எங்களுக்கு அல்ல: கா.வே.பாலகுமாரன்
இலங்கையில் மூன்றாவது சுனாமி வரப்போகிறது- அது எங்களுக்கு அல்ல என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.


புலிகளின் குரல் வெளியீட்டுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆழிப்பேரலை ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாலகுமாரன் பேசியதாவது:

அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்பது எவருக்கும் ஏற்படும் முன்னர் தேசியத் தலைவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல.

அனைத்து தளபதிகளுக்கும் தொடர்பாளர்களுக்கும் இது தெரியும். இதுவிடயத்தில் இவர்கள் தலைவரிடம் சொல்வதற்கு செல்லும் போது அதற்கு முன்னரே தலைவரே எந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணித்த வரலாறுதான் இங்கே நடந்த வரலாறு.

தன்னுடைய சொந்தப் பாதுகாப்பையும் புறந்தள்ளி அவர் செயற்பட்டது எல்லோருக்கும் தெரியும். மிஞ்சியோரும் மிஞ்சாமல் இறந்தோரும் மீட்கப்பட்ட வரலாறும் அனைவருக்கும் தெரியும்.

வீதியோடு கிடந்த சடலங்களைக் கூட பண்போடும் மரியாதையோடும் மீட்டெடுத்த வரலாறு எங்களுக்கு உரியது.

ஆழிப்பேரலையையடுத்து ஓடோடி வந்த புலம்பெயர் வந்த தமிழ் மக்களிடத்திலே பேசுகையில் தலைவர் கூறினார், 2ஆம் சுனாமி என்று.

மூன்றாவது சுனாமி வரப்போகிறது- ஆனால் அது எங்களுக்கு அல்ல என்பது மாத்திரம் சொல்ல முடியும். ஆனால் உண்மையான சுனாமி வந்தால் என்னை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

சுனாமி பேரவலத்திற்கு எதிராக நாம் கிளர்ந்தெழுந்த விதம் உலகத்தினது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரவலத்தையே பெருவாய்ப்பாக மாற்றிய தேசம்- பேரவலத்திலிருந்து மீளக் கூடிய தேசம் என்று எங்களைப் பற்றிச் சொல்கிறார்கள்.

ஆச்சே மாகாணத்தில்தான் ஆழிப்பேரலை அவலம் நடந்தேறியது. அங்கே நடந்த விடுதலைப் போராட்டம் இன்று முற்றுப்பெற்றுவிட்டது. சிறிலங்கா அரசாங்கம் போல் அங்கே உள்ள இந்தோனேசிய அரசாங்கம் இல்லாமல் அரசும் போராளிகளும் விட்டுக்கொடுத்தார்கள். போராளிகளது உறவுகள் இறந்திருந்தனர். பேச்சுகள் நடந்தன. திட்டவட்டமான வரையறைகளுடான பேச்சுகளையடுத்து இன்று அங்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் ஏற்றுக்கொண்ட தீர்வு அது.

சுனாமியினால் உடலின் வெளிப்புற புண்ணுக்கு அப்பால் உளப்புண் என்று ஒன்று உள்ளது. அதை ஆற்றுவது காத்திரமான விடயம். அந்த உளவளத்துணை பணி இன்னும் தொடர்கிறது.

இசை பற்றிய ஆய்வு முழுமையடையவில்லை. அது வெறுமையை, தனிமையை நிரப்புகிறது. உளவியல் ரீதியாக மனிதனது உச்ச வெளிப்பாடாக இருக்கிறது.

இசைக்கு மேலத்தேய கீழத்தேய என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஊடகத்தின் வரைவிலக்கணமே இடைவிடாது பிறரோடு தொடர்புடைய வைப்பதுதான். எங்களது ஊடகங்கள் சில பிறரை கத்தரிக்கின்ற வேலையைச் செய்கின்றன. இதை கைவிட வேண்டும் என்றார் அவர்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-21-2005, 12:42 AM
[No subject] - by kuruvikal - 12-21-2005, 09:06 AM
[No subject] - by sri - 12-26-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 12-26-2005, 02:58 PM
[No subject] - by தூயவன் - 12-26-2005, 03:49 PM
[No subject] - by sri - 01-01-2006, 04:52 AM
[No subject] - by sri - 01-10-2006, 12:36 PM
[No subject] - by sri - 01-18-2006, 01:18 PM
[No subject] - by sri - 01-24-2006, 12:21 AM
[No subject] - by தூயவன் - 01-30-2006, 04:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)