Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது இராணுவத்தினர் தாக்குதல்
#11
<b>யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து இராணுவம் இன்றும் துப்பாக்கிச் சூடு! விரிவுரையாளர், மாணவர் கைது!! </b>


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துபாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.


பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினது அட்டூழியச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து கல்லூரி முன்பாக போக்குவரத்தை தடை செய்து உள்ளனர். சம்பவ இடத்துக்கு கண்காணிப்புக்குழுவினர் சென்றுள்ளனர்.

1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக யாழ். பல்கலைக் கழகத்துக்குள் சிறிலங்கா இராணுவம் உள்நுழைந்துள்ளமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்ற்னார்.

கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்..
::
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 12-19-2005, 10:07 AM
[No subject] - by adsharan - 12-19-2005, 10:09 AM
[No subject] - by kuruvikal - 12-19-2005, 12:17 PM
[No subject] - by நர்மதா - 12-20-2005, 09:59 AM
[No subject] - by நர்மதா - 12-20-2005, 09:59 AM
[No subject] - by adsharan - 12-20-2005, 10:51 AM
[No subject] - by நர்மதா - 12-20-2005, 11:12 AM
[No subject] - by MUGATHTHAR - 12-20-2005, 11:14 AM
[No subject] - by sri - 12-20-2005, 12:57 PM
[No subject] - by Thala - 12-20-2005, 02:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)