12-20-2005, 09:38 AM
தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைப்பு
இலங்கைத் தீவில் செயற்படும் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடையே இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன், தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான தனது ஆதரவினைத் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளிடையேயான சந்திப்புகளை முன்னெடுப்பது தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான யோசனைகளை இந்த 4 பேர் கொண்ட குழு அளிக்கும் என்றும் இது தொடக்க நிலைதான் என்றும் ஆர். யோகராஜன் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
புதினம்

" "