12-20-2005, 12:10 AM
கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு ஜெயலலிதாவை விட அதிக உதவி செய்தவர். தமிழ் நாட்டில் உள்ள எம்மவர்களுக்கு பல்கலைக்கலகக் கல்வி ஜெயலலிதாவினால்(91 - 96) அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு கருணாநிதி ஆட்சி வந்தபோது, மீண்டும் அனுமதி கிடைத்தது.அதற்கு நாம் கட்டாயம் நன்றி செலுத்தப்பட வேண்டும். இப்படி பல உதவிகள் செய்தார். ஆனால் தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பிறகு தி.மு.க வில் தலைவராக வருவதற்கு, கட்சியில் தனக்கு அடுத்து செல்வாக்குள்ள வை.கோ இருப்பதால், கடினம் என்பதால் சுயநலமாக எடுத்த ஆயுதம் விடுதலைப்புலிகள், தன்னை வை.கோ வின் உதவியோடு அழிக்க முயல்கிறார்கள் என்ற பொய் செய்தி. அந்த விடயத்தில் எவ்வாறு மன்னிப்பது?. ஆனால் ராம்,சோ,விசு போன்றவர்களைப் போல எதற்கு எடுத்தாலும் எம்மை எதிர்ப்பதில்லை. கருணாநிதி நன்மைகள் செய்தாலும், தனது சுயலாபத்திற்காக சில தீமைகளும் செய்திருக்கிறார்

