12-11-2003, 04:29 PM
சொல்கிறேன் என குறை நினைக்காதீர்கள். தெரிகிறது தானே வீணாக எம்மோடு முட்டி மோதுவதற்காக வருகிறார்கள் என.. அப்போ நீங்கள் கொஞ்சம் விலகிக் கொள்ளுங்களன். சாமி எழுதியது ஞாபகத்திற்கு வருகிறது. முட்டாள்களிற்கு விலகி இடம் விட்டு போவது எனது பண்பு என ஒருவர் கூறியதாக. அப்படி நீங்களும் கொஞ்சம் அமைதி காத்துப்பாருங்களன். அமைதியின் செயல் வலிமை மிக்கது.வேண்டுமென்றே வம்புக்கிழுப்பவர்கள் கருத்தின் மீது தமது ஆதிக்கத்தை காட்டாது பழிசுமத்தல்களாக கருத்து முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு கருத்து எழுதுவதை தவிற்துக்கொள்ளுங்கள். புத்திசாலிகள் கருத்தை புரிந்து கொள்வார்கள் முட்டாள்கள் மோதிக்கொண்டு தான் இருப்பார்கள். அது அவர்களின் தனித்தியல்பு. முட்டாள்களோடு எமது நேரத்தை வீணடிப்பது தகுமா? புரியவைத்து பாற்பது புரியவே புரியாத ஐடங்கள் என நாம் உணர்ந்து விட்டால் விலகுவது தான் உத்தமம். இத்தகைய முட்டாள்களை கொஞ்சம் திருத்தலாமே என நினைத்து சில புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கருத்தை முன்வைத்து பாக்கிறோம். அதுகும் புரியாத போது படு முட்டாள்கள் என நினைத்து விலகுவது சாலச்சிறந்தது. எமது உடல் உளத்திற்கும் நன்மையே.
[b]Nalayiny Thamaraichselvan

