Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்!
#1
<b>புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்: </b>

அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்புகிறது
அமெரிக்காவின் நாகா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புளூட்டோ' கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. நியு ஹரிசான்ஸ் என்ற இந்த விண்கலத்தை 65 கோடி டாலர் செலவில் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் புளூட்டோ கிரகத்தின் தோற்றம் அது உருவானது எப்படிப சூரியனை சுற்றி வரும் புளூட்டோ கிரகம் போன்ற வேறு சில கிரகங்கள் பற்றியும் ஆய்வு நடத்தும்.

இந்த நியுஹரிசான்ஸ்' விண்கலம் 454 கிலோ எடை உள்ளது. அட்லஸ்' ராக்கெட் டில் வைத்து இந்த விண்கலம் அனுப்பப்படும்.

இந்த விண்கலம் கேப் கணவரால் ராக்கெட் தளத் துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ராக்கெட்டிலும் அந்த விண்கலம் வைக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் இது ஏவப்படும்.

அமெரிக்கா இங்கிலாந்து ரஷியா உள்பட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வுக்கூடம் அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வுக்கூடத் துக்கு அமெரிக்கா மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் புதிய ராக்கெட்டை அனுப்பும். இப்போது உள்ள டிஸ்கவரி ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் புதிய எரி பொருள் டாங்கி அமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு 2010-ம் ஆண்டுக்குள் 18 தடவை நாசா' நிறுவனம் ராக்கெட்டுகளை அனுப்ப உள்ளது.

நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்! - by Rasikai - 12-19-2005, 03:58 PM
[No subject] - by RaMa - 12-19-2005, 08:38 PM
[No subject] - by pepsi - 12-20-2005, 12:52 PM
[No subject] - by ப்ரியசகி - 12-25-2005, 07:50 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 06:16 PM
[No subject] - by சந்தியா - 01-21-2006, 06:54 PM
[No subject] - by sinnappu - 01-23-2006, 09:48 PM
[No subject] - by Rasikai - 01-24-2006, 01:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)