12-19-2005, 09:59 AM
யாழ்ப்பாணத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோரை சிறிலங்கா இராணுவம் கடுமையாகத் தாக்கியுள்ளது. இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் ஒருவரும் மாணவர் பீடத் தலைவரும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களைக் கண்டித்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் இன்று திங்கட்கிழமை யாழ். கல்வி சமூகத்தினர் மனு கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இன்று காலை 10.30 மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் நோக்கி யாழ். பல்கலைக்கழக கல்வி சமூகத்தினர் பேரணியாகச் சென்றனர்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் பரமேஸ்வரா சந்தி அருகே தடுத்து நிறுத்தி பேரணியாக செல்ல முயன்றோர் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டையும் தாக்குதல்களையும் நடத்தியது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் என். பேரின்பநாதன், மருத்துவ பீட மாணவர் தலைவர் டி. காண்டீபன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், கலைப்பீட பீடாதிபதி ஆர்.சிவச்சந்திரன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.
மேலும் தினக்குரல் ஊடகவியலாளர் டி. சபேஸ்வரன், தினகரன் ஊடகவியலாளர் வின்ட்சன் ஜெயன், நமது ஈழநாடு ஊடகவியலாளர் ஜி. ஜெராட் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிய சிறிலங்கா இராணுவத்தினர் அவர்களது நிழற்பட கருவிகளையும் நொறுக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் பாதிப்படைந்தோர் விவரம் அதிகரிக்கக் கூடும் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&