12-18-2005, 11:54 PM
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/mar/peedasanam.jpg' border='0' alt='user posted image'>
<b>இடுப்புக்கு வலிமை அளிக்கும் பீடாசனம்</b>
பீடாசனம் செய்வது மிகவும் எளிது. முதலில் இரண்டு பாதங்களை சேர்த்து வைத்து, விரிப்பின் மேலே விறைப்பாக நிற்கவும், பிறகு இடுப்பின் இருபுறங்களிலும் உங்கள் கைகளை நேராக ஊன்றிக் கொள்ளுங்கள். பின்பு முழங்கால்களைச் சற்றே மடிந்து ஒரு பீடத்தில் உட்காரப் போவது போல் நிற்கவும். ( ஒரு உயரமான நாற்காலி மீது அமருவதற்கு என்ன நிலையில் இருக்க வேண்டுமோ, அதேப் போன்ற பாவனை தான்) அந்த நிலையில் உங்களுடைய இரண்டு தொடைகளை யும் ஒரே சமமான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். ( ஒரு கை ஏறி ஒரு கை இறங்கி இருக்கக் கூடாது)
முழங்கால் முட்டி மட்டுமே வளையலாம். உடலின் மற்ற பாகங்கள் விறைப்பாகவே இருந்திட வேண்டும். இடுப்பிலிருக்கும் கைகளையும் அகற்றவே கூடாது.
பலன்கள்.
1. இந்த ஆசனம் இடுப்பு, முழங்கால்கள், பாதங்கள் ஆகியவற்றுக்கு நல்ல வலிமையை கொடுக்கும்.
2. தொடைகள் கெட்டியாகவும், உறுதியாகவும் அமையும்.
3. கெண்டைக்கால் தசைப் பகுதிகள் வலிமை அடையும்.
4. கைகளுக்கும் இதுஒரு புதுவிதமான பயிற்சி.
- தினகரன்