12-18-2005, 07:43 PM
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - ஜனாதிபதி இடையே கொழும்பில் சந்திப்பு
ஆறுமுகத் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டமான் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் வன்னியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவை சந்தித்துவிட்டு இவர் கொழும்பு திரும்பியிருந்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று இந்தியா இல்லத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விருந்து உபசரிப்பின்போது ஆறுமுகத் தொண்டமானுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த சந்திப்பு பற்றிய மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
ஆனால் தமிழோசையிடம் பேசிய இலங்கை தொழிலாளர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ஆர்.யோகராஜன், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமாதான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் சுமூகமான முறையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.
BBC Thamiloosai

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>