12-18-2005, 05:32 AM
<b>புங்குடுதீவில் இளம்பெண் படுகொலை: தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் கண்டனம்</b>
புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்திஇ புங்குடுதீவில் சாரதாம்பாள்இ கோண்டாவிலில் றஜனி போன்ற எமது பெண்களை தமது காடைத்தனத்துக்கு பலி கொண்டது போல் இன்று புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் மத்துவெளியை சேர்ந்த 20 வயதுடைய இளையதம்பி தர்சினியையும் பலி கொண்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து அயலில் உள்ள தனது பெரிய தாயின் வீட்டுக்கு சென்று வரும் தர்சினி நேற்று முன்தினத்திலிருந்து வீடு திரும்பவில்லை. இவர் வீடு சிறிலங்கா கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் பெரிய தாயின் வீட்டுக்கு சென்று வருவதாக சென்ற தர்சினி நேற்று சடலமாக இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தனது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்த கொலைக்கு சிறிலங்கா கடற்படையே பொறுப்பு இவ்வாறான நடவடிக்கைகளை இராணுவம் உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் இதனை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த படுகொலைச் சம்பவத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: புதினம்

[size=14] ' '