Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு அக்கிரமம்...
#2
<b>புங்குடுதீவு சம்பவத்திற்கு அன்னையர் முன்னணி கண்டனம்</b>

புங்குடுதீவில் நேற்று மாலை 7மணிக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளம் யுவதியை அருகில் இருந்த கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்தமைக்கு யாழ். மாவட்ட அன்னையர் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் யுவதிகளையும், தாய்மார்களையும், ஏன் அகவை முதிர்ந்த பெண்களையும் இராணுவத்தினரும், கடற்படையினரும், காவற்றுறையினரும் சேர்ந்த காமவெறியர்கள் தமது பாலியல் இச்சைகளை தீர்பதற்காக கொடுரமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கி படுகொலை செய்கின்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் யுத்த காலத்தில் இதே கடற்படை சிப்பாய்களால் சாரதாம்பாள் என்னும் பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்தபின் காவோலையால் மூடிவிட்டு சென்றனர். இன்றைய சமாதான காலத்தில் அதேமண்ணில் அதே முனைவில் படுகொலை செய்த பின் கிணற்றில் வீசி உள்ளனர். இன்று உலகம் முழுவதும் பெண்கள் உரிமையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரம் எமது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை எந்த நாடுகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிக வேதனை தருகிறது.

தொடர்ச்சியாக அதாவது இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் எமது பெண்கள் இராணுவம் எந்த நேரமும் எதையும் செய்துவிடலாம் என்ற ஒரு நிலையே காணப்பட்டு வருகிறது. செம்மணியில் கிருசாந்தி, புங்குடுதீவில் சாரதாம்பாள், கிழக்கு மகாணத்தில் எத்தனையோ பெயர்கள். அண்மைக் காலங்களில் அல்லைப்பிட்டியில், மன்னாரில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வல்லிபுரப் பகுதியில், நேற்று முன்தினம் எழுதுமட்டுவாழில், நேற்று மீண்டும் புங்குடுதீவில், நாளையும் எங்கோ! பாலியல் வல்லுறவு முயற்சி, வல்லுறவின் பின். படுகொலையை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த எமது மண்ணில் வாழும் பெண்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக வெளிப்படையாக செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே நேரம் தொடர்ந்தும் நாம் மௌனிகளாக இருக்கத் தயாரில்லை. வீதிகளில் இறங்க தயாராகிவிட்டோம். இவ்வாறு யாழ் மாவட்ட அன்னையர் முண்ணனியினர் தெரிவித்துள்ளனர்.

தகவல்: சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
புங்குடுதீவு சம்பவத்திற்கு அன்னையர் முன்னணி கண்டனம் - by தூயவன் - 12-18-2005, 05:22 AM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 05:32 AM
[No subject] - by அருவி - 12-18-2005, 05:43 AM
[No subject] - by MUGATHTHAR - 12-18-2005, 05:47 AM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 05:49 AM
[No subject] - by RaMa - 12-18-2005, 06:00 AM
[No subject] - by happy - 12-18-2005, 08:02 AM
[No subject] - by kurukaalapoovan - 12-18-2005, 09:34 AM
[No subject] - by sri - 12-18-2005, 09:59 AM
[No subject] - by happy - 12-18-2005, 10:38 AM
[No subject] - by Danklas - 12-18-2005, 11:52 PM
[No subject] - by Sukumaran - 12-19-2005, 12:13 AM
[No subject] - by kurukaalapoovan - 12-19-2005, 12:21 AM
[No subject] - by kurukaalapoovan - 12-24-2005, 08:30 AM
[No subject] - by Danklas - 12-24-2005, 08:50 AM
[No subject] - by kuruvikal - 12-24-2005, 09:01 AM
[No subject] - by Danklas - 12-24-2005, 09:10 AM
[No subject] - by kurukaalapoovan - 12-24-2005, 09:28 AM
[No subject] - by அருவி - 12-24-2005, 09:35 AM
[No subject] - by MUGATHTHAR - 12-24-2005, 09:40 AM
[No subject] - by தூயவன் - 12-24-2005, 02:17 PM
[No subject] - by Thala - 12-24-2005, 02:49 PM
[No subject] - by kurukaalapoovan - 01-09-2006, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)