12-18-2005, 05:20 AM
<b>இளம்யுவதி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை - புங்குடுதீவில் கடற்படையினர் கோரத்தாண்டவம் </b>
புங்குடுதீவில் இளம்யுவதி ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்து வெளியைச் சேர்ந்த இளையதம்பி தர்மினி(20) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த யுவதி இரவு படுக்கைக்கு தனது பெரிய தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். வழமை போன்று நேற்று இரவு 7மணியளவில் தனது பெரிய தாயர் வீட்டை நோக்கிச் சென்ற யுவதியை சிறீலங்கா கடற்படையினர், வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு கொலை செய்து புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாளும் கிணற்றில் போட்டுள்ளார்கள்.
யுவதியைக் காணாத பெற்றோர் தேடிச்சென்ற போது குறித்த கிணற்றில் சடலமாகக் கிடக்க கண்டனர். இது தொடர்பாக கடற்படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தும் வராததையிட்டு அவ்விடத்தில் மக்கள் கூடியுள்ளனர். குறித்த இடத்திற்கு காவல்துறையினரோ, கடற்படையினரோ இது வரையும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சங்கதி

[size=14] ' '