Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவிசிற்கு கம்பவாருதி வருகிறார்-ஓம் நாராயணா
#13
பாத்திங்களோ சோழியான் அண்ணா விடையும் சொல்லி கேள்வியும் கேக்குறியள்....தனது காலத்தின் பதிவை தத்துருவமான கற்பனை புகுத்தித் தந்தவர்தான் கம்பன்....அவர் சாரமாகச் சொன்னது பல நல்ல விடயங்களை அன்றி தீயவற்றை அல்ல....! உண்மையில் அவர் பெண் அழகுப்பித்தராக இல்லாமல் சராசரிக் கலைஞனாக கவிஞராகத்தான் வர்ணித்துள்ளார்...அதேவேளை அவர் ஆணின் அழகையும் தான் வர்ணித்துள்ளாரே..அதுதான் வீரம் பற்றி ஆணின் கற்பு என்று அழகாக வர்ணித்துள்ளாரே...இன்று அப்படி ஒரு இலக்கியப்பதிவு உண்டா...உங்கள் எங்கள் காலத்தை நாளைய சந்ததிக்குக்காட்ட...வீடியோவும் இன்ரநெற்றும் நிரந்தரமல்ல...நாம் இன்று தேடுவது போல் நாளை உங்கள் சந்ததி கல்வெட்டும் சுவடும் தேடும் நிலை எமக்கு வேண்டாம் என்றுதான்..அன்றைய தன் காலத்தை கற்பனை ரசனை கலந்து கம்பன் கவிபாடி ஏடெழுதினானோ என்னவோ...அதனால்தான் என்னவோ அவை பல் ரசனை கொள் கவித்தேனாய், தமிழ் இலக்கணம் பிசகா மொழியிலக்கியமாய் விளங்குகிறதோ என்னவோ...!....அதை வைத்து ஒரு கழகமே அமைக்க முடியுதென்றால் அது கம்பரின் திறனே அன்றி இன்றைய தமிழரினதல்ல.....!

கம்பர் அன்று போட்ட பாலம் இன்று நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதே....சற்றலைட் படங்கள் மூலம்... அதற்கு என்ன சொல்கிறீர்கள்....அப்போ அதுவும் பொய்யா....?!

கம்பர் அரக்கர் என்று சொன்னது உண்மை அரக்கர்களையல்ல மனிதருக்குள் இருந்த அரக்க வம்சத்தையே...மனிதரை மூன்று கணங்களாகப் பிரிப்பர்...ஒன்று தேவ கணம் பூதகணம் (அரக்கர் கணம்) மனித கணம் என்று...எல்லாரும் மனிதர்கள் தான் ஆனால் இன்றைய இனப்பிரிவுகள் போல் அன்று அப்படிப் பிரிவுகள் இருந்திருக்கக்கூடும்..ஆனால் பின்னாளில்... அவரின் கவிகளுக்கு விளக்கம் தந்த 'வித்தகர்கள்' தான் அரக்கர்களுக்கு ஒரு பேருருவம் கொடுத்து எமது கற்பனையை இன்னும் கொஞ்சம் வியாபித்துவிட்டு வித்தை காட்டியுள்ளனர்.....! அது கம்பர் குற்றமல்லவே....!

எது எப்படியோ கம்பர் இராமயானம் என்பது ஒரு கவிச்சுனை...! அதை படிக்கப்படிக்க கவித்தேன் ஊறிக்கொண்டே இருக்கும்...அது கம்பனின் கவிப் புலமை தந்த கொடை.....! அப்படி ஒரு இலக்கியத்தை நாம் ஏன் நமது காலத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவாக்கக் கூடாது....! கவியிலக்கியம் தனக்கு முடிவுரை எழுதுமாறு கட்டளை பிறப்பித்ததோ என்னவோ...இன்றைய ஆண் அல்லது பெண் கவிஞர் ஆகட்டும் எல்லோரும் பெண்களின் அழகை மட்டுமே வரிக்குவரி உரிந்து காட்டுகிறார்கள்... ஆண்களைப் பற்றி மூச்சுக் கூட இல்லை...புகழேந்தியின் நளவெண்பா தமயந்திக்கு ஈடாக நளனுக்கும் மதிப்பளித்து... அவன் புற, அக அழகைக் கூட அழகாகச் செப்பியதே......! ஏன்... அவை தூர நோக்கோடு சமுகத்தின் தேவை கருதி எழுந்த இலக்கியப்பதிவுகள்...இன்று ஒன்று மட்டும் மகிழ்ச்சி அளிக்கிறது.. எமது போரியல்,அரசியல் என்ற புதிய பரிமானத்தில் கவியிலக்கியம் என்று சொல்லத்தக்க வகையில் ஈழத்தில் புதுவையால் ஒரு கவியிலக்கியம் படைக்கப்பட்டாலும் அது இன்னும் நடுநிலை விமர்சனத்துக்கு அப்பாற்தான் நிலை எடுத்துள்ளது...அதற்கு தூர நோக்குடன் ஒரு இலக்கிய வடிவம் கொடுக்க வேண்டுமாயின் அவை சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றன என்பது என்னவோ வருத்தமளிக்கும் உண்மை...பலர் அவற்றை கையில் எடுக்கவே பயப்படுகின்றனர்...! ஏன்.....! இந்த நிலை தொடர்ந்தால் தென்னிந்தியச் சினிமாச் சூத்தைகள் தான் எமது எதிர்காலச் சந்ததியின் கவியிலக்கியமாகப் போகும்.....! இதைத்தடுக்கவாவது கம்பன் கவி என்றும் எங்கும் ஒலிக்கட்டும்....!

<img src='http://www.yarl.com/forum/files/bridge_srilanka_india.jpg' border='0' alt='user posted image'>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 12-09-2003, 08:38 PM
[No subject] - by yarl - 12-09-2003, 09:12 PM
[No subject] - by nalayiny - 12-09-2003, 09:16 PM
[No subject] - by kuruvikal - 12-09-2003, 09:25 PM
[No subject] - by vasisutha - 12-10-2003, 04:10 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 05:32 AM
[No subject] - by shanthy - 12-10-2003, 08:04 AM
[No subject] - by yarl - 12-10-2003, 08:19 AM
[No subject] - by Paranee - 12-10-2003, 08:38 AM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:03 AM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 01:21 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 02:21 PM
[No subject] - by sOliyAn - 12-10-2003, 11:40 PM
[No subject] - by kuruvikal - 12-10-2003, 11:48 PM
[No subject] - by shanthy - 12-11-2003, 08:38 PM
[No subject] - by kuruvikal - 12-12-2003, 11:36 AM
[No subject] - by Manithaasan - 03-10-2004, 09:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)