12-16-2005, 12:56 AM
நான் ஆரம்பித்துவைத்த குட்டிக்கதையை நிறைவுசெய்தமைக்கு எனது நன்றி சகோதரி இரசிகை. உங்கள் புதிய கதையைத் தொடர்கிறேன்.
அப்போது மாதங்கிக்கு பன்னிரண்டு வயது. பாடசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் பயமறியாத இளங்கன்றுபோல் துள்ளிக்குதித்தபடியே செல்வாள். கண்ணில் படுவோர் எல்லோருடனும் ஏதாவது பேசிக்கொண்டே செல்வாள். எதுவும் பேசாது நிற்பவர்களைக்கூட அண்ணா, அக்கா, மாமா, தம்பி என்று வாய்க்குவந்த முறைகளைக்கூறி அழைத்து ஏதாவது கதைத்துக்கொண்டே செல்வாள்.
"சரியான வாயாடி" என்று மாதங்கியைக் காண்பவர்கள் கூறுவார்கள்.
ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தமாட்டாள். அப்படியானதொரு வேளையில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.