12-15-2005, 11:13 PM
<b>கிண்டல் மன்னன்</b>
[b]பாகம் - 6
ஆறுமுகம் ஆசிரியர் தனது ஒரு முகத்தால் அங்குமிங்கும் பார்த்தார். யாரையுமே காணவில்லை. வகுப்பிற்கு மாணவர்கள் வருமுன்னமே தான் இரகசியமாகக் கொண்டுவந்த கவிதைப்புத்தகத்தை எடுத்து அதிலிருந்த ஒரு கவிதையை கரும்பலகையில் எழுதினார். இப்படியாக மற்றவர்களுடைய கவிதைகளைக் கொண்டுவந்து மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு அது தான் எழுதிய கவிதை என்று தம்பட்டம் அடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி.
அன்றும் அப்படியே எழுதிவிட்டு மாணவரின் வருகைக்காக காத்திருந்தார். மணி அடித்தது.. மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கரும்பலகையில் இருந்த கவிதையை வாசித்தபடியே இருக்கையில் அமர்ந்தார்கள் மாணவர்கள். கவிதையின் அற்புத வரிகளை கண்டு மாணவர்கள் ஆசிரியாருக்கு பாரட்டை தெரிவித்து விட்டு தமது கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனார். அப்போது தான் வகுப்பின் கிண்டல் மன்னன் கையை உயர்த்தினான்
ஆறுமுகம் ஆசிரியருக்கு அவன் கையை உயர்த்துவது கடைக்கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாதவர்போல் திரும்பிப் பார்க்காது நின்றுகொண்டிருந்தார். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது. எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். "¬ÚÓ¸õ º¡÷, ¯í¸û ¸Å¢¨¾Â¢ø ¦º¡üÀ¢¨Æ ¯ñÎ" ±ýÈ¡ý «Åý, ¿ì¸£Ãý º¢Å¨ÉôÀ¡÷òÐ ÓÆí¸¢ÂÐ §À¡Ä
"யார் என்னைப் பெயர் சொல்லி அழைப்பவன்?" என்று கூறியபடி அவனைத் திரும்பிப்பார்த்து "நீ என்ன நாகேஷ் என்ற நினைப்போ இல்லை இல்லை நக்கீரன் என்ற நினைப்போ?" என்று சற்றுத் தடுமாறியபடியே கூறினார். இதனைக்கேட்டதும் எல்லோரும் ஒரே நேரத்தில் உரத்துச் சிரித்தனர்.
உடன் கிண்டல்மன்னன் மூர்த்தி கூறினான் நான் நாகெஸும் இல்லை நக்கீரனும் இல்லை ஆனால் நீங்கள் எழுதிய கவிதையின் மூலபிரதி என்னிடம் உள்ளது. அதற்கும் நீங்கள் எழுதியதற்கும் இடையில் சொற்பிழைகள் உண்டு என்று தனது முலபிரதியை அவரிடம் நீட்டினான்
அதனை நடுங்கும் கைகளில் வாங்கிப் பார்த்த ஆறுமுகம் ஆசிரியருக்கு அப்போதுதான் இதயத்தின் படபடப்பு அடங்கியது. கிண்டல் மன்னன் மூலப்பிரதி என்று நீட்டியதை வாங்கிப்பார்த்தபோது அது அண்மையில் வெளிவந்த ஒரு சினிமா பாடல் புத்தகம் என்பதை அவர் அப்போதுதான் புரிந்துகொண்டார். மீண்டும் எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் உரத்துச் சிரித்தனர். கிண்டல் மன்னன் தனது பட்டப் பெயருக்கேற்ப தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பதை ஆசிரியர் புரிந்துகொண்டார். அப்போது வகுப்பறையின் முன்னால் அவசரமாக யாரோ நடந்துவரும் சத்தம் கேட்டது.
நடந்து வந்தது வேறு யாருமல்ல அதிபர் தான். மாணவர்களின் சிரிப்பைக் கேட்ட அவர் வகுப்பில் ஆசிரியார் ஒருவரும் இல்லை என்றா எண்ணத்தில் உள்ளே நுழைந்தவுடன் தான் சினிமா புத்தகத்துடன் நின்ற ஆறுமுக வாத்தியாரைக் கண்டார்.... ஓ மாஸ்டர் நீங்கள் நிற்கிறிர்களா? இவங்கடை சத்தத்தை கேட்டு ஓருவரும் இல்லை என்று இரண்டு சாத்து சாத்துவோம் என்று வந்தனான் என்றார்.. ஆறுமுக வாத்தியாருக்கு என்ன சொல்வது என்றே தெரியலை. அப்போது கிண்டல் மன்னன் தான் எழும்பி இல்ல சேர் ஆறுமுகம் சேர் உண்மையாக நாம் அனுபவித்து எழுதும் கவிதைக்கும் மற்றவர்களின் கவிதையை திருடி எழுதினால் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி நகைச்சுவையுடன் சொல்லி கொண்டிருந்தார் என்று சொன்னான். அவனின் பதிலைக்கேட்ட அதிபர் விஞ்ஞான வாத்தி ஏன் கவிதை எழுதுவது பற்றி பிள்ளைகளுக்கு படிபிக்கிறார் என்று நினைத்தபடியே திரும்பி போய் விட்டார். மீண்டும் கிண்டல் மன்னனின் கை உயர்ந்தது....
எதற்கு மீண்டும் மீண்டும் கையை உயர்த்துகிறாய்? வேறு ஏதாவது சினிமாப் பாட்டுப்புத்தகம் வைத்திருக்கிறாயா? என்று கேட்டார் ஆறுமுகம் ஆசிரியர். மீண்டும் அவரே ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே கேட்கலாம் என்றார். அதே வேளையில் அந்த வகுப்பறையில் நிகழ்ந்தவற்றை நினைத்தபடியே கீழே பார்த்துக்கொண்டு சென்ற அதிபர், வேறு எங்கேயோ பார்த்தபடி எதிரே வந்துகொண்டிருந்த சங்கீத ஆசிரியை சிந்துவுடன் எதிர்பாராமல் மோதிவிட்டார். சில நிமடங்கள் செய்வதறியாது நின்றார் அப்புறம் சாரி கேட்டுவிட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தார். அப்புறம் இன்றைய நாளை நினைக்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது.
இனிதே நிறைவேறிற்று பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்.

<b> .. .. !!</b>