Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவலை மறந்திரு!
#1
<b>கவலை மறந்திரு!</b>
--------------------

<img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'>

<b>வயசாச்சு எனக்குத்தான்... நீ விடை பெற்று போன...
உன் வீட்டு முற்றத்துக்கு அல்ல ...
நீ அறிவாயா?

காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்..
எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ...
நரை நிறைந்து உடல் வாடினாலும்...
நீ திரும்பி வந்து அள்ளி விளையாட...
நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்!

உன் தாயை அன்று வயிற்றில் சுமந்தேன்..
நீ தவழ்ந்த மண்ணை இன்று நெஞ்சில் சுமக்கிறேன்...!

பாக்கு இடித்து சப்பும் பல்லில்லா கிழவி என்றா எனை நினைத்தாய்?
ஏ.கே47 ம் நான் ஏந்துவேன்!
பத்தோடு பதினொன்றாய் பாடை கொள்வேன் என்றுமா நினைத்து இருந்தாய்?
மாட்டேன்....போர் செய்வேன்..! உன் சந்ததிக்காய்..!!!

நாளை ஊர் திரும்பு...
ஒரு வேளை நான் இருப்பேனோ..? என்னமோ?
எங்கே உன் பாட்டி தன் இறுதி மூச்சை விட்டாள் என்று ..எவரும் கேட்டால்..
நான் எரிந்த இடம் நோக்கி கை நீட்டு கண்ணே...
என் மானமதை காத்து ...
அந்த மங்கல் கண் கொண்ட கிழவி ...
இங்கேதான் இறந்து போனாள் என்றும் சொல்லு!

உன் விரல் சுட்டிய இடத்தில் விடுதலைக்காய்..
விறகாய் எரிந்த இவள்...
கார்த்திகை பூவாய் மீண்டும் கண் மலர்வேன் - கண்ணே
கவலை மறந்திரு...!!!</b>
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
கவலை மறந்திரு! - by Rasikai - 12-15-2005, 10:25 PM
[No subject] - by Mathan - 12-15-2005, 10:28 PM
[No subject] - by sOliyAn - 12-16-2005, 01:46 AM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 04:06 AM
[No subject] - by Jenany - 12-16-2005, 12:09 PM
[No subject] - by அருவி - 12-16-2005, 12:27 PM
[No subject] - by Rasikai - 12-16-2005, 02:21 PM
[No subject] - by Vishnu - 12-16-2005, 02:47 PM
[No subject] - by Rasikai - 12-16-2005, 02:50 PM
[No subject] - by Vishnu - 12-16-2005, 03:10 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 06:42 PM
[No subject] - by jcdinesh - 12-16-2005, 08:16 PM
[No subject] - by shanmuhi - 12-16-2005, 08:41 PM
[No subject] - by RaMa - 12-16-2005, 09:59 PM
[No subject] - by அனிதா - 12-16-2005, 10:32 PM
[No subject] - by kavithan - 12-17-2005, 01:45 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 03:42 PM
[No subject] - by Rasikai - 12-17-2005, 03:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)