![]() |
|
கவலை மறந்திரு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவலை மறந்திரு! (/showthread.php?tid=2017) |
கவலை மறந்திரு! - Rasikai - 12-15-2005 <b>கவலை மறந்திரு!</b> -------------------- <img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'> <b>வயசாச்சு எனக்குத்தான்... நீ விடை பெற்று போன... உன் வீட்டு முற்றத்துக்கு அல்ல ... நீ அறிவாயா? காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்.. எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ... நரை நிறைந்து உடல் வாடினாலும்... நீ திரும்பி வந்து அள்ளி விளையாட... நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்! உன் தாயை அன்று வயிற்றில் சுமந்தேன்.. நீ தவழ்ந்த மண்ணை இன்று நெஞ்சில் சுமக்கிறேன்...! பாக்கு இடித்து சப்பும் பல்லில்லா கிழவி என்றா எனை நினைத்தாய்? ஏ.கே47 ம் நான் ஏந்துவேன்! பத்தோடு பதினொன்றாய் பாடை கொள்வேன் என்றுமா நினைத்து இருந்தாய்? மாட்டேன்....போர் செய்வேன்..! உன் சந்ததிக்காய்..!!! நாளை ஊர் திரும்பு... ஒரு வேளை நான் இருப்பேனோ..? என்னமோ? எங்கே உன் பாட்டி தன் இறுதி மூச்சை விட்டாள் என்று ..எவரும் கேட்டால்.. நான் எரிந்த இடம் நோக்கி கை நீட்டு கண்ணே... என் மானமதை காத்து ... அந்த மங்கல் கண் கொண்ட கிழவி ... இங்கேதான் இறந்து போனாள் என்றும் சொல்லு! உன் விரல் சுட்டிய இடத்தில் விடுதலைக்காய்.. விறகாய் எரிந்த இவள்... கார்த்திகை பூவாய் மீண்டும் கண் மலர்வேன் - கண்ணே கவலை மறந்திரு...!!!</b> - Mathan - 12-15-2005 தாமதமாக வந்தாலும் கவிதையோடு வந்துருக்கிறீங்க. வாழ்த்துக்கள் ரசிகை. - sOliyAn - 12-16-2005 வசி! வசி!! மிச்சமா ஏதாவது டீவிடீ இருக்கா.. இதுக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Nitharsan - 12-16-2005 அவர் பரிசுக்கு எழுதல்லை படத்துக்கு கவிதை எழுதினார்.. கவிதைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.. - Jenany - 12-16-2005 கவிதை ரொம்ப நல்லா இருக்கு ரசிகை.வாழ்த்துக்கள். - அருவி - 12-16-2005 sOliyAn Wrote:வசி! வசி!! மிச்சமா ஏதாவது டீவிடீ இருக்கா.. இதுக்கும்.. <!--emo& நிறைஇருக்கு வேணுமா?? $1 க்கு விக்கிறாங்க டீவீடி அதில 1 தரலாம் :wink: :wink: - Rasikai - 12-16-2005 ஆமாம் சோழி அண்ணா நிதர்சன் சொன்னமாதிரி நான் பரிசுக்காக எழுதவில்லை. நன்றி உங்கள் எல்லோரினது பாராட்டுகளுக்கும் - Vishnu - 12-16-2005 ரசிகை.. நீண்ட நாட்களின் பிறகு உங்கள் கவிதை கண்டதில் மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்.. பரீட்சை நன்று செய்தீர்களா?? உங்கள் விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள். - Rasikai - 12-16-2005 வணக்கம் விஷ்ணு உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றிகள். பரீட்சைக்கு நான் நல்லாத்தான் படிச்சனான் எனக்கு தெரிஞ்ச எல்லாம் ஒன்றும் விடாமல் எழுதிட்டன். மறுமொழி வரத்தான் தெரியும் நான் எழுதினது சரியா பிழையா என்று :oops: - Vishnu - 12-16-2005 Rasikai Wrote:வணக்கம் விஷ்ணு உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றிகள். ம்ம்ம்... தெரிஞ்சது எல்லாத்தையும் எழுதுறதா ரசிகை.. கேட்டதை தானே எழுதணும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நகைச்சுவைக்கு சொன்னேன் ரசிகை... பரீட்சையில் நல்ல பெறு பேறுகள் பெற வாழ்த்துக்கிறேன்... - ப்ரியசகி - 12-16-2005 ஆகா ரசி அக்கா..கவி அருமை..வித்யாசமான கோணத்தில் பார்த்திருக்கின்றீர்கள்...வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Rasikai Wrote:பரீட்சைக்கு நான் நல்லாத்தான் படிச்சனான் எனக்கு தெரிஞ்ச எல்லாம் ஒன்றும் விடாமல் எழுதிட்டன். மறுமொழி வரத்தான் தெரியும் நான் எழுதினது சரியா பிழையா என்று :oops: பரீட்சை எப்டி என்று கேட்க நினைத்தேன்..அதுக்குள்ளே சொல்லி விட்டீர்கள்...நல்ல மார்க்ஸ் பெற வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- jcdinesh - 12-16-2005 உங்கள் கவிதை நன்று...தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.... ...........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்....... - shanmuhi - 12-16-2005 <b>காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்.. எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ... நரை நிறைந்து உடல் வாடினாலும்... நீ திரும்பி வந்து அள்ளி விளையாட... நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்! </b> கவிவரிகள் அருமை. - RaMa - 12-16-2005 காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்.. எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ... நரை நிறைந்து உடல் வாடினாலும்... நீ திரும்பி வந்து அள்ளி விளையாட... நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன் ரசிகை கவிதையை அழகான வரிகளால் தொடுத்து இருக்கிறிர்கள். அழகான வரிகள். ம்ம் பரீட்சை பற்றி தான் கேட்க நினைத்தேன் ... கேள்வி கேட்க முதலே பதில் வாசித்து விட்டேன் ஆமா ப்ரியசகி உங்கள பரீட்சை பற்றி சொல்லவே இல்லையே - அனிதா - 12-16-2005 கவி வரிகள் நன்றாக இருக்கு ரசி அக்கா.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 12-17-2005 ரசிகை அக்கா கவிதை நன்றாக இருக்கு .. வித்தியாசமாகவும் இருக்கு .. நன்றாக கவி எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள். ஆமா பரீட்சையில் எத்தினை கவி எழுதினீர்கள்.. புரியாமல் முழிக்க போறாங்கள் .. அட அது தான் நீங்கள் சொன்னீர்களே உங்களுக்கு தெரிந்த எல்லாம் எழுதினீர்கள் என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 12-17-2005 வாழ்த்துச் சொன்ன பிரியசகி றமா , ஜெய்டினேஸ், அனித்தா, சண்முகி அனைவருக்கும் நன்றிகள் - Rasikai - 12-17-2005 kavithan Wrote:ரசிகை அக்கா கவிதை நன்றாக இருக்கு .. வித்தியாசமாகவும் இருக்கு .. நன்றாக கவி எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.வணக்கம் தம்பி கனநாள் கண்டு நலமா? ம்ம் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். ஆகா வந்துட்டார் லொள்ளு பண்ண. ஆமா எனக்கு தெரிந்த எல்லாம் எண்டு நான் சொன்னது பரீட்சை கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்கள். அதுக்காக கட்டுரை கவிதை எழுத இல்லையப்பா Re: கவலை மறந்திரு! - N.SENTHIL - 12-31-2005 Rasikai Wrote:<b>கவலை மறந்திரு!</b> ¸Å¢¨¾ «ÆÌ.Å¡úòÐì¸û |