Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணம் இருக்கா இல்லையா
#1
பொழுது போகாமல் நான் உந்த வலை புூக்களிலை இயற்கையிலையே மணம் இருக்கா இல்லையா எண்டு மணந்து ஒரு ஆராச்சி செய்து கொண்டிருந்தான் அப்ப ஒரு யாழ் கள உறுப்பினர் ஒருதரின்ரை வலை புூவிலை இருந்து ஒரு மணம் வீசியது அதை இங்கை உங்களிற்காகவும் தாறன் மணந்து பாத்து சொல்லுங்கோ யாழ் உறவுகளே எழுதியவர் நம்மடை நித்தியா தான்

<img src='http://img220.imageshack.us/img220/8420/romantic16yc.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:blue'>நளினமேனி நவரசப் பந்தல்
இனிய மெய்யான பொய்
பொய்யோ மெய்யோ என
அய்யோ என்னை
மலைக்க வைக்கும்
இரு குன்றுகள்

நெய்யாய் எனை உருக்கி
ஒரு கை போதாமல் என்
இரு கைகளால் அள்ளி
பருகப் பருகத் தாகம் பெருக
முயல முயல முயற்சி நீள
அகல அகல அனைத்தும் அகன்று
ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்...

நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி
மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து
தீய்ந்து பயனாய் மூளும் தீயை
தீயாய் மாறி யாண்டும் எரித்து
எரிந்தது சுட்டு சூடு பறக்க...

என் உடலில் உரசி உசிரை கரைத்து
கரைந்து இரண்டற இன்றே கலந்து
கலைந்த கூந்தலும் இல்லாத ஆடையும்
நிமிர்ந்த நிர்வாண சுகத்திலே
அகன்று விரிந்து ஆகாயம் போல...

எழுந்து தாழ்ந்து ஆழியின் அலையாய்
அடித்துப் புரண்டு நெய்யைக் கடைந்து
உருக்கி உருக்கி மோட்சம் கொண்டு
அருந்தி அருந்தி அமரம் கண்டு...

நிறைந்து நிலையாய் என்றும்
ஒன்றாய் ஓங்கி ஒன்றியிருப்போம்.

-நித்தியா</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
மணம் இருக்கா இல்லையா - by sathiri - 12-14-2005, 11:26 PM
[No subject] - by Vasampu - 12-15-2005, 12:28 AM
[No subject] - by pulukarponnaiah - 12-15-2005, 01:15 AM
[No subject] - by sOliyAn - 12-15-2005, 01:54 AM
[No subject] - by SUNDHAL - 12-15-2005, 03:09 AM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 07:10 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)