12-14-2005, 09:24 PM
<b>அம்பாறை மாவட்டத்தில் அரசு ஹெலிகாப்டர் மீது தாக்குதல்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051214175317slafhelicopter203.jpg' border='0' alt='user posted image'>
அரசு ஹெலிகாப்டர் மீது தாக்குதல்
அம்பாறை மாவட்டம் அருகம்பையில் ஸ்ரீ லங்கா விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மீது இன்று மாலை 3.30 மணியளவில் சிறு ஆயுதங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
தற்போது இலங்கைக்கான விஜயமொன்றை மேற் கொண்டுள்ள இத்தாலிய பிரதி வெளி விவகார அமைச்சர் மாகரியா பொனிவா அம்மையார் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அறுகம்பை பிரதேசத்திற்கு இன்று காலை விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார்
மாலையில் அவரை மீண்டும் கொழும்பிற்கு அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்த ரஷ்யா தயாரிப்பான எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா விமானப் படை ஊடகப் பேச்சாளரான குறூப் கப்டன் அஜந்த சில்வா
அறுகம்பையிலிருந்து 10 வான் மைல்கள் தொலைவில் அதாவது தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் 4 துப்பாக்கிச் சூடுகள் ஹெலிகொப்டர் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பாதுகாப்பாக ஹெலிகொப்டர் அம்பாறை விமானப் படைத்தளத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
போர் நிறுத்த உடன் படிக்கை அமுலுக்கு வந்த பின்பு ஸ்ரீ லங்கா விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்
பீபீசி தமிழ்