12-09-2003, 04:42 PM
Quote:kuruvikal
Gender:
Age: 70
Posted: Tue Dec 09, 2003 5:08 pm
மூடிவைகிறதா...அழகென்பது பொருளா பண்டமா மூடிவைக்க.... அதுவும் ஒரு உணர்வு வெளிப்படுத்தும் கலை...அதையும் மூடிவைக்கிறார்கள் என்றால் ஒன்றில் அது அதிக அளவில் இருக்க வேண்டும் அல்லது அது மிக மட்டமாக இருக்க வேண்டும்...இதில் எது உண்மை...தீர்மானிக்க வேண்டியது அழகை கலையாகக் காணும் ரசிகர்கள்......அதாவது உங்களைப் போல் கவிஞர்கள் உட்பட்டோர்...அல்லது இல்லாத மான்விழி.. சந்திரவதனம்... விற்புருவம்.. சங்குக்கழுத்து.. பிறைநுதல்... மின்னல் இடை.... தாமரைப்பாதம்... முல்லைப்பூ சிரிப்பு... இப்படிப் பலதும் வருகுதே....ஆனால் ஒன்றையும் இதுவரை கண்டத்தில்லை...அதுதான் சந்தேகமாக இருக்கிறது...அழகுக்கு உவமை எடுத்தீர்கள் சரி மன்னிப்போம்.... ஆனால் தகுந்த உவமேயத்துக்கா உவமை எடுத்தீர்கள் என்பது கேள்விக்குறியே.....! காதல் கவிதை என்று கஜோலின் படமும் ஜோதிகாவின் படமும் வந்ததே தவிர உங்கள் ஈழப்பெண்கள் வரவில்லையே...ஓ அவர்களிடம் உவமேயமே இல்லையோ.....என்னவோ......??!
புழுகுக்கும் ஒரு அளவு வேண்டாமோ...!
_________________
மேக்கப் போட்டு வந்ததை எல்லாம் இஞ்சை கொண்டு வராதேயுங்கோ!

