12-14-2005, 01:31 AM
Kanthappu Wrote:[quote=Sukumaran][size=18]கந்தப்பு.. அண்ணாமார்.. உங்கள் கருத்துக்களைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. இந்தக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் பலதும் டக்கிலஸ்.. கருணா.. சங்கரி.. மற்றும் அரசாங்கதரப்பு செய்திகளை வாசித்தபின் வைக்கப்படும் கருத்துக்களென வாசிப்பவர்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதுபோன்று நாங்களும் வாசித்துவிடுகிறோம்.. அதில் எந்ததவறும் இல்லை..[size=18]கந்தப்பு.. உங்கள் பதில் பேனாவை பேனாமுனையால் எதிர்கொள்ள திரனியற்றவர்களின் பதிலாக அமைகின்றது.
அதேபோன்று பத்திரிகை வாசிப்பதுகூட அவரவர் விருப்பம்.. வாசிக்க விரும்புபவர்கள் யார் என்ன செய்தாலும் தேடி வாசிப்பார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்...
இங்கு இத்தளத்தில் டக்கிலஸ்.. கருனா.. சங்கரியார்.. இப்படி பலரும் கருத்து எழுதுகின்றார்கள்.
இவர்கள் ஏன் இப்படியான பெயர்களில்வந்து அப்படியான கருத்துக்களை வைக்கிறார்கள் என்பது சாதாரணபடிப்பறிவுள்ள என்போன்றவர்களுக்கு விளங்கும்போது மிகப்படித்த அறிவுள்ள நமது வாசகர்களுக்கு விளங்காது என்று
நீங்கள் கருதினால் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.
இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.
அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.
பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...
உங்கள் கருத்துக்கு நன்றி. பலருக்கு நீங்கள் சொன்னது போல அரசாங்கம், டக்ளஸ் போன்றவற்றின் கருத்து என்று விளங்கும். ஆனால் எனக்குத்தெரிந்த சிலர், தேசியப்போரட்டத்தின் மீது பற்று இருந்தும், இப்பத்திரிகைகளினை வாசித்து விட்டு குழப்பம் அடைகிறார்கள்.ஆங்கிலத்திலும் செய்திகள் வருவதினால் வேற்று நாட்டவர்களும் கைகளுக்கு இப்பத்திரிகை செல்வதுண்டு.உண்மையை எழுதினால் பரவாயில்லை. புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லி பொய் இல்லோ எழுதுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம், சுனாமிக்குப்பின் ஈழத்தில் உதவி செய்வதற்காக சிட்னி முருகன் கோவிலடியில் பணம் சேகரித்தபோது, கோவில் நிறுவாகத்தினர், அவர்களை வீதி ஒரமாக நிண்டு சேர்க்குமாறு என்று சொல்ல, அச்சம்பவத்தினை நாகராஜா சிட்னி முருகன் கோவிலினைப் புலிகள் கைப்பற்ற முயற்சித்தாகவும், அதற்கு மக்கள் எதிர்ப்பு என்று சொல்லி, திருவிழா காலத்தில் எடுத்த படத்தினை தனது கட்டுரையில் பிரசுரித்தார்கள்.
வியாபாரம், வருமானம் ஈட்ட எவ்வளவோ வழிகள் இருக்கு. அதற்கு எமது தாயகப்போராட்டமா கிடைத்தது?
இத்தனை ஆய்வாளர்கள்;.. கட்டுரையாளர்கள்.. பேச்சாளர்கள்.. இணையத்தளங்கள் பத்திரிகைகள்.. வானொலிகள்.. தொலைக்காட்சிகள்.. போராட்டத்துக்கு பிரச்சாரம் செய்வதற்கு இருந்தும் சாதாரன எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக வைக்கப்பட்ட உங்கள் கருத்து.. அவரது எழுத்தின் தன்மையை புலப்படுத்துவதாகவே அமைகின்றது..
8

