12-12-2005, 06:12 AM
pulukarponnaiah Wrote:அது சரி உந்தத் தவறணயில கடன் கணக்குக் கூடிப் போச்சுது எண்டு தானே முகமூடி போட்டுக் கொண்டு அடிச்சு உடச்சனாங்கள்.பத்தேக்க ஒழிச்சு வச்ச பீப்பாயள் இன்னும் மிச்சங் கிடக்கு.முகத்தான் ,சின்னப்புவையும் கூட்டியந்தா ஒரு பிடி பிடிக்கலாம்.
அந்த எண்ணத்தை இப்போதே நிப்பாட்டனை. அதுவும் பிடிபட்டு போச்சுதாம்.சங்கதியில ஏற்கனவே போட்டிருக்காங்கள். நானும் பங்கிற்கு வந்தமாதிரி கதைக்காதையணை. ஏற்கனவே நிறையப் பிரச்சனைகள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>உடுவில் கிராமிய வைத்தியசாலையில் கசிப்பு- இளைஞர்கள் கைப்பற்றி அழித்தனர். </b>
உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள கிராமிய வைத்தியசாலை வளவில் இருந்து அப் பகுதி இளைஞர்களால் 40 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இவ் வைத்திய சாலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினருக்கு வழங்கவெனக் கொண்டு வந்து குறிப்பிட்ட ஒரு நபரினால் கசிப்பு வைக்கப்பட்டு வந்ததாகவும் இதனை கண்டு சந்தேகம் கொண்ட இளைஞர்களால் கசிப்பு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும்; தெரியவருகின்றது.
வைத்தியசாலையில் குறிப்பிட்ட கசிப்பு உற்பத்தியாளார்கள் கொண்டு வந்து வைக்கும் சம்பவம் குறிப்பிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்குத் தெரியாது எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இப் பகுதியில் இத்தகைய சம்பவம் இடம் பெறுவது பொலிசாருக்கு தெரிந்திருந்த போதிலும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதன் பின் அப்பகுதியில் இளைஞர் குழுக்கள் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
[size=14] ' '

