![]() |
|
முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை (/showthread.php?tid=2102) |
முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை - தூயவன் - 12-11-2005 யாழ். உடுவில் பகுதியில் மக்கள் குடியேற்றத்தி;ற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த 'கள்ளு தவறணை"யை அகற்றுமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் குறித்த தவறணை அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட இந்த கள்ளுத் தவறணையை அந்த இடத்தில் இருந்து அகற்றும் படி பல தடவைகள் உரிய சங்கத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் மதுவரித் திணைக்களம் என பல இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனை அகற்ற உரியவர்கள் நடவடிக்கையெடுக்காத நிலமையிலேயே ஆத்திர முற்றவர்களினால் இத் தவறணை அடித்துடைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது. குறிப்பிட்ட தவறணைக்கு வரும் மதுப் பிரியர்களின் நடவடிக்கைகாரணமாக இப் பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் வழிபாடுகள் கூட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டு இருந்த வருகின்றமையும் குறிப்பிட வேண்டியதாகும் இந்நிலைமையிலேயே இந்த தவறனை இனம் தெரியாதவர்களினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கான பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு யாழ் கள உறுப்பினர்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 12-11-2005 அட சாதாரண குடிமக்களிற்கு இதற்குகூட உரிமைல்லயா. முகத்தார், சின்னப்பு பொறுமைகாக்காமல் பொங்கி எழுங்கள். :wink: :wink: (ஆனா உதவிக்கு நாம வரமாட்டம் :wink: :wink: ) - MUGATHTHAR - 12-11-2005 நல்ல காலம் அடிச்சு உடைக்கேக்கை நான் அங்கை இருக்கேலை வீட்டிலை நிம்மதியா அடிக்கேலாதெண்டு அங்கை போண அங்கையும் விடுறாங்கள் இல்லை..... தம்பி இதுககெல்லாம் பொங்கி எழுந்து ஆஸ்பத்ததிரிலை படுக்க வைக்கப் போறீர் போல கிடக்கு. - தூயவன் - 12-11-2005 என்ன செய்கின்றதண்ணா. இப்ப எங்கள் சனம் முழிச்சுட்டாங்கள். எனவே கவனாமாக தவறணைக்கு போங்கோ. சின்னப்புவையும் கொஞ்ச நாளாக காணோம். எங்கையாவது அடிவாங்கிக் கிடக்கின்றாரோ தெரியாது? - விது - 12-11-2005 இண்டைக்கு கள்ளுக்கடைநாளைக்கு பாருங்கோ அப்பக்கடையள் படப்போறபாட்டை. - tamilini - 12-11-2005 சே இதெல்லாம் சிம்பிள் அவைக்கு என்ன முகம்ஸ் எத்தனை எச்சரிக்கையைக்கண்டவை. நானும் என்ன தூயவன் எச்சரிக்கை எல்லாம் விடறார் என்று பாத்தன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-11-2005 tamilini Wrote:சே இதெல்லாம் சிம்பிள் அவைக்கு என்ன முகம்ஸ் எத்தனை எச்சரிக்கையைக்கண்டவைபிள்ளை இப்பிடித்தூக்கி கதைச்சு கூண்டோடை கைலாயம் அனுப்பப் போறீர் போல கிடக்கு.......... - தூயவன் - 12-11-2005 ஒம் விடாதையப்பு ஏற்கனவே நடுமண்டையில் அடிக்கின்றதுக்கு பிளான் போட்டவர். இப்ப இப்படியொரு சதி முயற்சி. நீங்களும் டக்*ஸ் மாதிரி உயிர் பிச்சை கேட்டு ஜநா சபைக்கு உடனே மனுப் போடுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-11-2005 Quote:பிள்ளை இப்பிடித்தூக்கி கதைச்சு கூண்டோடை கைலாயம் அனுப்பப் போறீர் போல கிடக்கு..........சே சே அப்படிச்செய்வமா?? பொன்ஸ்சிற்காக என்றாலும் செய்யமாட்டம் கவலைப்படாதேங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->பாத்தியளே தம்பி தூயவன் சந்தில சிந்து பாடிறார். எங்கோ ஒரு வார்த்தை சொன்னா கண்ட இடம் எல்லாம் ஆஆஅ :evil: - தூயவன் - 12-11-2005 tamilini Wrote:பாத்தியளே தம்பி தூயவன் சந்தில சிந்து பாடிறார். எங்கோ ஒரு வார்த்தை சொன்னா கண்ட இடம் எல்லாம் ஆஆஅ :evil: புரிகின்றதல்லவா! எங்களோடு கதைக்கம் போது அவதானமாக இருக்கவேண்டும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - pulukarponnaiah - 12-11-2005 என்ன தூயவன் இதத் தான் சொல்லிறது தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளயையும் கிள்ளி விடுறதெண்டு.பிள்ளை தமிழ் கோவிக்காதே என்ன. அது சரி உந்தத் தவறணயில கடன் கணக்குக் கூடிப் போச்சுது எண்டு தானே முகமூடி போட்டுக் கொண்டு அடிச்சு உடச்சனாங்கள்.பத்தேக்க ஒழிச்சு வச்ச பீப்பாயள் இன்னும் மிச்சங் கிடக்கு.முகத்தான் ,சின்னப்புவையும் கூட்டியந்தா ஒரு பிடி பிடிக்கலாம். - sinnappu - 12-11-2005 எட புளுகர் என்னடாப்பா நடக்கிது இங்கை ம...பில படுத்திட்டன் முகத்தானை வேற கானேல்லை ஓய் சாட்றீ எங்கையப்பா போய்டீர் ஓய் டூயவன் என்னப்பு நடக்கிது - tamilini - 12-11-2005 Quote:புரிகின்றதல்லவா! எங்களோடு கதைக்கம் போது அவதானமாக இருக்கவேண்டும்.சரிங்க தம்பிசார் அவதானனமா இருக்கிறம் அண்ணன் என்ன தம்பி என்ன அவசரமான உலகத்தில எல்லாரும் கவுத்திடுவாங்க.
- வியாசன் - 12-11-2005 அப்பு உடுவில் சனங்கள் கள்ளுக்கடையை திறந்து குடிமக்களுக்கு இலவசமாக கள்ளு குடுக்கினமாம். உங்கடை கூட்டாளியள் சாட்றி முகத்தார் பொன்னையர் எல்லாரும் அங்கைதான் குப்பற கிடக்கினமமாம் போய் பாக்கிறதுதானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 12-11-2005 வியாசன் Wrote:அப்பு உடுவில் சனங்கள் கள்ளுக்கடையை திறந்து குடிமக்களுக்கு இலவசமாக கள்ளு குடுக்கினமாம். உங்கடை கூட்டாளியள் சாட்றி முகத்தார் பொன்னையர் எல்லாரும் அங்கைதான் குப்பற கிடக்கினமமாம் போய் பாக்கிறதுதானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது தானே பாத்தன் உந்த சாட்றீ யாரைத்தான் விட்டுது ஓய் சாட்றீ போகேக்கை என்னையும் கூட்டிக்கொண்டு போனா குறைஞ்சே போய்டுவீர் :evil: :evil: :evil: :evil: - தூயவன் - 12-12-2005 ஓமோம் பெரிய வங்கிக் கணக்கு. அது தான் ஞாபகம் வைச்சிருக்கேலாமல் கடன் எல்லாம் மறந்து போவான். போறதே 4 பேர் தான். நீயப்பு.... எப்படி எண்டாலும் தப்பிக்க முடியாது. வீடு வந்து கேட்பான் பார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-12-2005 pulukarponnaiah Wrote:அது சரி உந்தத் தவறணயில கடன் கணக்குக் கூடிப் போச்சுது எண்டு தானே முகமூடி போட்டுக் கொண்டு அடிச்சு உடச்சனாங்கள்.பத்தேக்க ஒழிச்சு வச்ச பீப்பாயள் இன்னும் மிச்சங் கிடக்கு.முகத்தான் ,சின்னப்புவையும் கூட்டியந்தா ஒரு பிடி பிடிக்கலாம். அந்த எண்ணத்தை இப்போதே நிப்பாட்டனை. அதுவும் பிடிபட்டு போச்சுதாம்.சங்கதியில ஏற்கனவே போட்டிருக்காங்கள். நானும் பங்கிற்கு வந்தமாதிரி கதைக்காதையணை. ஏற்கனவே நிறையப் பிரச்சனைகள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>உடுவில் கிராமிய வைத்தியசாலையில் கசிப்பு- இளைஞர்கள் கைப்பற்றி அழித்தனர். </b> உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள கிராமிய வைத்தியசாலை வளவில் இருந்து அப் பகுதி இளைஞர்களால் 40 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இவ் வைத்திய சாலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினருக்கு வழங்கவெனக் கொண்டு வந்து குறிப்பிட்ட ஒரு நபரினால் கசிப்பு வைக்கப்பட்டு வந்ததாகவும் இதனை கண்டு சந்தேகம் கொண்ட இளைஞர்களால் கசிப்பு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும்; தெரியவருகின்றது. வைத்தியசாலையில் குறிப்பிட்ட கசிப்பு உற்பத்தியாளார்கள் கொண்டு வந்து வைக்கும் சம்பவம் குறிப்பிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்குத் தெரியாது எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இப் பகுதியில் இத்தகைய சம்பவம் இடம் பெறுவது பொலிசாருக்கு தெரிந்திருந்த போதிலும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதன் பின் அப்பகுதியில் இளைஞர் குழுக்கள் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. |