Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள்
#1
புலிகள் தாக்குதலை முறியடிக்க உளவுப் பணியில் தனியார்: லெப்.ஜெனரல் சரத் பொன்சேக
விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் வகையில் உளவுப் பணியில் தனியாரை ஈடுபடுத்த இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியான லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாஇ சண்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது.
இருப்பினும் இதுவரை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 40-க்கும் மேலான புலனாய்வு அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.
தற்போதுள்ள கமாண்டர்களால் போராளிகளின் தாக்குதல் சதித் திட்டத்தை முன்கூட்டியே உளவு அறிந்து ராணுவத்துக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பிறகுதான் அவை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் ராணுவத்தின் உளவுப் பிரிவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ராணுவ உளவுப் பணியில் தனியார் ஏஜெண்டுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சரத் பொன்சேகா.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
.
Reply


Messages In This Thread
கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள் - by vasanthan - 12-12-2005, 03:53 AM
[No subject] - by sri - 12-13-2005, 10:04 AM
[No subject] - by kurukaalapoovan - 12-13-2005, 06:48 PM
[No subject] - by நர்மதா - 12-15-2005, 10:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)