12-11-2005, 10:50 AM
இதனை ஒரு விபத்து என்றுதான் பொலிசார் கூறுகின்றனர். இந்த விபத்தில் ஓர் ஆகாய விமானமும் ஈடுபட்டதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்றும், பொதுமக்கள் இந்த விபத்தைப்பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். இறந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை தெரியாது என்றும் கூறுகின்றார்கள். இப்போதும் பெரும் தீச்சுவாலைகளையும், கரும்புகைகளையுமே காணக்கூடியதாக இருக்கின்றது. இலண்டன் நேரம் காலை 10.00 மணிக்கு பொலிசார் தமது அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

