Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு
#7
*இன்று முற்பகல் 11-45 மணியளவில் திருகோணமலையில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை நகரிலும் தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இன மோதல்களைத் தோற்றுவிக்கும் முகமாக ஈ.பி.டி.பி யினர் முஸ்லிம் பகுதிகளுக்கு வீச வைத்திருந்த குண்டே அங்கு வெடித்துள்ளது என தெரியவருகின்றது

திருகோணமலையில் திருஞான சம்பந்தர் வீதிக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசமான மூர் வீதிக்கு கைக்குண்டு தாக்குதல்களை நிகழ்த்தும் நோக்குடனேயே இந்த திட்டம் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளால் தீட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இன்று இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பினை நோக்கினால் இராணுவத்தரப்பினால் வெளியில் இருந்தே இந்தக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தாலும். அதற்கான சாத்தியங்கள் இங்கு ஒரு வீதத்திற்குக்கூட இல்லை என்றே கருதலாம்.

இந்த அலுவலகத்தைச்சுற்றி நாற்புறமும் இராணுவத்தினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர மேலதிகமாக சிறீ லங்கா கடற்படையினர் இங்கு காவலரன்களை அமைத்தும் இருக்கின்றனர். இது தவிர இந்த அலுவலகத்திற்கு சிறீ லங்கா காவற்துறையினரின் பாதுகாப்பும் வழங்கப்டபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முகாமைச்சுற்றி மகவும் உயரமான சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன்மேல் இருந்து கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இது தவிர குண்டு வெடித்த இடம் அலுவலகத்தின் நடுப்பகுதி என்பதனால் வெளியில் இருந்து வீசப்பட்ட குண்டு இந்தனையையும் தாண்டி எவ்வாறு வெடித்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்தி: சங்கதி
*இச் செய்தி நேற்று வந்தது என்பதை கவனத்தில் கொள்க.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-10-2005, 02:25 PM
[No subject] - by Mathuran - 12-10-2005, 04:07 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 04:58 AM
[No subject] - by அருவி - 12-11-2005, 05:10 AM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 05:41 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 05:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)