Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை
#1
யாழ். உடுவில் பகுதியில் மக்கள் குடியேற்றத்தி;ற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த 'கள்ளு தவறணை"யை அகற்றுமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் குறித்த தவறணை அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட இந்த கள்ளுத் தவறணையை அந்த இடத்தில் இருந்து அகற்றும் படி பல தடவைகள் உரிய சங்கத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் மதுவரித் திணைக்களம் என பல இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனை அகற்ற உரியவர்கள் நடவடிக்கையெடுக்காத நிலமையிலேயே ஆத்திர முற்றவர்களினால் இத் தவறணை அடித்துடைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறிப்பிட்ட தவறணைக்கு வரும் மதுப் பிரியர்களின் நடவடிக்கைகாரணமாக இப் பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் வழிபாடுகள் கூட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டு இருந்த வருகின்றமையும் குறிப்பிட வேண்டியதாகும் இந்நிலைமையிலேயே இந்த தவறனை இனம் தெரியாதவர்களினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

எனவே உங்களுக்கான பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு யாழ் கள உறுப்பினர்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றோம்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Messages In This Thread
முகத்தார் மற்றும் சின்னப்புக்கான எச்சரிக்கை - by தூயவன் - 12-11-2005, 04:45 AM
[No subject] - by அருவி - 12-11-2005, 05:01 AM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 05:09 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 06:05 AM
[No subject] - by விது - 12-11-2005, 06:16 AM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:55 PM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 01:37 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 01:44 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 01:47 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 02:27 PM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 04:15 PM
[No subject] - by sinnappu - 12-11-2005, 04:21 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 04:39 PM
[No subject] - by வியாசன் - 12-11-2005, 06:40 PM
[No subject] - by sinnappu - 12-11-2005, 11:54 PM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 05:01 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 06:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)