Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூத்தடித்த கடலே விடை கொடு..!
#9
[quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>

<b>கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!

படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!</b>

கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

வலிகளை வலிமையான வரிகள் கொண்டு விவரித்து பாட குருவிகளுக்கா வார்த்தைப் பஞ்சம். எங்கள் வாழ்வின் வளிநெடுகில் அவலம். அவலத்துள் அவலங்கள் கண்டு கொதிக்கின்ற குருவிகளே. தமிழன் என்பதனால் பொதுவான கட்டமைப்பைக் கூட புதைகுழியில் புதைத்துவிட்டு தமிழனை பதைக்க விட்ட சிங்கள இனவெறி பிடித்த பேய்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை, சுனாமியிடம் கேட்டு பயன் என்ன?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-09-2005, 12:57 PM
[No subject] - by kuruvikal - 12-09-2005, 01:57 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 02:01 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 02:01 PM
[No subject] - by KULAKADDAN - 12-09-2005, 10:06 PM
[No subject] - by sWEEtmICHe - 12-10-2005, 04:02 PM
Re: கூத்தடித்த கடலே விடை கொடு..! - by Mathuran - 12-10-2005, 04:25 PM
[No subject] - by அனிதா - 12-10-2005, 09:48 PM
[No subject] - by Mathan - 12-10-2005, 11:18 PM
[No subject] - by lollu Thamilichee - 12-11-2005, 12:42 PM
[No subject] - by kuruvikal - 12-20-2005, 06:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)