Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு
#1
திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள ஈபிடிபி தேசவிரோதிகளின் முகாமிற்குள் இன்று காலை 11.45 மணியளவில் பாரிய குண்டொன்று வெடித்துள்ளது. இதனால் குறித்த முகாமின் மேற்கூரை து}க்கி வீசப்பட்டு, முகாம் கடுமையாகச் சிதைந்துள்ளதுடன், தேசவிரோதிகளும் படுகாயமடைந்துள்ளனர் . ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது காயமடைந்தவர்களின் பெயர் விபரம். ஞானப்பிரகாசம் புூலோகராஜன்-திருமலை அலுவலகப் பொறுப்பாளர்(வயது 40) அவரின் இளைய சகோதரர் ஞானப்பிரகாசம் அந்தனி பர்னான்டோ(சிறி 29 வயது), ஏ.ஏபிரகாம்(வயது 60), வேலாயுதம் ரகுநாதன்(முத்து 37 வயது),
இக் குண்டு அவர்களின் அலுவலகத்தில் பாவனையிலிருந்த கணணித் தொகுதியிலிருந்து வெடித்ததாகவும், இக் கணணி நீண்ட காலம் அவ் அலுவலகத்தில் பாவிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமலை காவல்த் துறையினர் தகவல் தருகையில் அலுவலகத்திற்க்கு வெளியிலிருந்து தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர். இது ஒரு உள் வீட்டு சதி என நம்பப்படுகின்றது.
சிறீலங்கா இராணுவம், மற்றும் கடற்படையின் உச்ச பாதுகாப்பில் உள்ள குறிப்பிட்ட முகாமிலேயே குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பையடுத்து வீதித்தடைகள் இராணுவத்தாலும், கடற்படையாலும் ஏற்படுத்தப்பட்டு குறித்த பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத அதேவேளை சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நன்றி: சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு - by தூயவன் - 12-10-2005, 02:04 PM
[No subject] - by Thala - 12-10-2005, 02:25 PM
[No subject] - by Mathuran - 12-10-2005, 04:07 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 04:58 AM
[No subject] - by அருவி - 12-11-2005, 05:10 AM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 05:41 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 05:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)