12-09-2005, 03:51 PM
<b>புலிகளின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்வோம்: சிறிலங்கா தளபதிகள் கூட்டாக அறிவிப்பு!</b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 18:20 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் எதுவித அச்சுறுத்தலையும் சிறிலங்காவின் பாதுகாப்புப் படை எதிர்கொள்ளும் என்று முப்படைகளின் தளபதி தயா சந்தகிரி, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விமானப் படை தளபதி டொனால்ட் பெரேரா மற்றும் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய தயா சந்தகிரி, அண்மையில் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் மீண்டும் யுத்தம் ஏற்படாது என்றார்.
"யுத்தத்துக்கு நாங்களும் தயார். ஆனால் யுத்தம் நடைபெறக் கூடும் எனத் தெரியவில்லை" என்றும் தயா சந்தகிரி தெரிவித்தார்.
"விடுதலைப் புலிகள் 2 விமானங்களை தம்வசம் வைத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் எதுவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகிறோம்" என்று விமானப் படை தளபதி டொனால்ட் பெரேரா தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களால் யுத்தம் ஏற்படாது என்று சிறிலங்கா இராணுவத்தளபதிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்
http://www.eelampage.com/index10.php?cn=22379

::