Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துளிதுளியாய்
#10
வணக்கம் பரணீ அண்ணா,

நீங்கள் புதிய கவிஞர் அல்ல என்பதால் என்னுடைய இந்தக் கருத்து. இது என்னுடைய பார்வையில் மட்டுமே.

துளி 1:
மதத்தை கற்பனை ஓவியமெனக் குறித்துள்ளீர்கள். ஓவியம் இரசிக்கப்படுகின்ற ஒன்று. அந்தவகையில் மதம் இல்லை. எனவே உங்கள் அந்த வரிகளில் ஒரு வன்மையான கருத்து இல்லை. மிகவும் மென்மையாக இருக்கிறது. (காதல் கவிதைகள் எழுதி எழுதிப் பழக்கப்பட்டுவிட்டது போலும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)

"எத்தனை துளிகள் வீழ்ந்தபோதும்
எத்தனை நதிகள் பாய்ந்தபோதும்"
என்கின்ற வரிகள் ஏற்கனவே கேட்டுவிட்டோம் என்கின்ற அலுப்பைத் தருகின்றன.

துளி 2:
பெயரிற்காய் எதுக்கு மதம்? அப்படியெனில் அது தேவையில்லைத்தானே? பெயரிற்காய் நீ தமிழனாக இரு என்று நாம் சொல்ல முடியுமா? "மதத்திற்காக உன்னை மாற்றாதே" என்கின்ற வரியில் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். அதாவது உனக்கானதுதான் மதமே ஒழிய... மதத்திற்காக நீ இல்லை. நன்று.

துளி 3 & துளி 4:
நல்ல கருத்து. ஆனால் புதிதாய் ஒன்றும் சொல்லப்படவில்லை என்று நினைக்கின்றேன். ஏற்கனவே கேட்டுவிட்ட உணர்வு.

துளி 5:
மனிதமனம் பற்றி சுருக்கமாய்ச் சொன்னாலும் சூப்பரா இருக்க. மாறுவதும் அதுதான். மாற்றுவதும் அதுதான். அருமை!

துளி 6:
காதல் கவிதைக்கு தானே கரவை பரணீ. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. உங்களுடைய தனித்துவம் கவிதையில் தெரிகிறது. அற்புதம்.

துளி 7:
ம்... பரணீ அண்ணாவின் காதலி கொடுத்து வைத்தவள். காதல் கவிதை எழுதக் கரவை பரணியிடம் கற்றுக் கொள்ளுங்கள் காதலர்களே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அருமையான வரிகள்.

துளி 8:
அழுகை வருகிறது. ஈழத்தவரின் அவலம் சொல்கின்ற சிற்ப வரிகள்.

துளி 9:
கண்ணீர்த்துளியை அடுத்து விழுந்த பனித்துளி இந்தக் கவிதை. இதமாக இருக்கிறது.

துளி 10:
"நீ என்னருகில் உள்ளவரை என் கரங்கள் ஓயாது" என்ற வரிகள் நன்று. ம்..காதலி அருகில் உள்ளவரை எழுதுவதை கரங்கள் நிறுத்தாது? அல்லது கற்பனை அருகில் உள்ளவரை கரங்கள் ஓயாதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


மொத்தம்:
காதல் கவிதைகள் = நன்று! அருமை!
ஈழத்து அவலம் = அற்புதம்!
சமூகம் சார்ந்து = புதிதாய் கொஞ்சம் சிந்திக்கலாம். திருத்தலாம்.

பராட்டுகள்.

நன்றி


Reply


Messages In This Thread
துளிதுளியாய் - by Paranee - 12-07-2003, 07:35 AM
[No subject] - by Paranee - 12-07-2003, 09:05 AM
[No subject] - by AJeevan - 12-07-2003, 09:40 AM
[No subject] - by shanthy - 12-07-2003, 09:58 AM
[No subject] - by kuruvikal - 12-07-2003, 10:16 AM
[No subject] - by manimaran - 12-07-2003, 10:22 AM
[No subject] - by Paranee - 12-07-2003, 01:22 PM
[No subject] - by vasisutha - 12-07-2003, 07:47 PM
[No subject] - by shanmuhi - 12-07-2003, 08:01 PM
[No subject] - by இளைஞன் - 12-08-2003, 12:02 AM
[No subject] - by pepsi - 12-08-2003, 02:54 AM
[No subject] - by kaattu - 12-08-2003, 07:41 AM
[No subject] - by Chandravathanaa - 12-08-2003, 08:29 AM
[No subject] - by Paranee - 12-08-2003, 03:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)