12-09-2005, 07:07 AM
Quote:தனியே முககுறிகளுடன் நின்றுவிடாமல் கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு வரியாவது ஆக்கபூர்வமாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கொண்டுவரப்பட்டது.
ஒரு வரி என்பதன் கருத்து என்னவென்று அறியத்தரமுடியுமா???
எனக்குத் தெரிந்தவரையில் <b>"அவன் விழுந்தான்"</b>, <b>"அவன் கால்தடுக்கி விழுந்தான்"</b> இவை ஒருவரியில் அமைந்த ஒரு வாக்கியங்கள். ஆனால் இப்படி யாழ்களத்தில் எழுதினால் <b>"உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்." </b>இப்படி வருகிறது.
அவ்வாறானால் ஒரு வரி என்பது என்ன????
சரி அதவிட இப்படி
<b>"வணக்கம்.
உங்களை வரவேற்கிறோம்"</b> என்று இரண்டு வரியிலும் எழுதிப் பார்த்தேன் அதுக்கும் அவ்வாறே வந்தது.
சில களங்களில் பார்த்திருக்கிறேன் குறிப்பிட்ட எழுத்துகளிற்கு மேல் எழுதச் சொல்லியிருப்பார்கள். அப்போது எமக்கும் தெரியும் எத்தனை சொற்களிற்கு மேல் கட்டாயமாக எழுத வேண்டும் என்று, ஆனால் ஒரு வரி என்பதற்கு ஒரு குறித்த வரையறை என்பது இல்லை என்று நினைக்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

