12-09-2005, 01:09 AM
kurukaalapoovan Wrote:கந்தப்பு, கனடா ரொறொன்ரோவிலையும் பூலோகசிங்கம் அன்கோ SriLankan எண்டு ஒரு ஆங்கில இலவசபத்திரிகை விடுறார். அதிலையும் விளம்பரங்கள் தாராளமாக இருக்கு. உலகத்தமிழ் மற்றய தமிழ் ஆதரவு பத்திரிகைகளில் விளம்பரபோடுறவை SriLankan இலும் போடீனம்.
லண்டனில இருந்து நடத்தப்படுகிற துரோக வானொலியிலையும் கொஞ்ச விளம்பரங்கள் அப்ப அப்ப வருகுது. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இப்படியான வியாபார நிறுவனங்களை முழுமையாக புறக்கணிக்க வேணும். செய்வார்களா?
சிட்னியில் உள்ள 'சிறி தட்சானா' என்ற கடையும் சன் தொலைக்காட்சியும் உதயம் பத்திரிகையில் தொடர்ந்து விளம்பரம் செய்கிறது. தமிழ் உணர்வாளர்கள தயவு செய்து இவற்றைப்புறக்கணிக்க வேண்டும். இப்பத்திரிகையில் நடேசன் ,எழுவான் கரையான் போன்றவர்களினால் தமிழ் தேசியத்திற்கு எதிராக கட்டுரைகள் எழுதப்படுகிறது.
போராட்டம் தவிர்ந்த வேறு விசயங்களும் இப்பத்திரிகையில் வருவதால் சிலர் இப்பத்திரிகையில் எழுதுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்குமானால் இப்பத்திரிகையில் எழுதுவதினை நிறுத்தி விட்டு, ஈழப்போரட்டத்திற்கு அதரவான பத்திரிகையில் எழுதவேண்டும்.

