Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா?
#1
<b>சிறிலங்காவின் அழைப்பு இந்தியாவால் நிராகரிப்பு?</b>

நோர்வேயை வெளியேற்றி இந்தியாவை ஏற்பாட்டாளர் நிலைக்குக் கொண்டுவருவதே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நகர்வாக இருந்தது. இதற்கு மங்கள சமரவீரவின் இந்தியாவிற்கான பயணத்தின் மூலம் பிள்ளையார் சுழி போடுவதற்கு மகிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்.
மங்கள சமரவீரவின் இந்திய விஜயமானது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீட்டிற்கான அழைப்பிற்கானதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆகையினால் இந்தியாவின் நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாக இருந்தது.

ஆயினும், இந்தியாவின் நிலைப்பாடானது சிறிலங்கா அரசின் எதிர்பார்க்கைக்கும் ஏற்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையே தற்பொழுது வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளன. அதாவது தற்போதைய சூழ்நிலை தனது பிரவேசத்திற்கு ஏற்றதாக இல்லை என இந்தியா கருதுவது போன்று தெரிகின்றது. அவ்வாறு இந்தியா கருதுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் சுட்டிக்காட்டத்தக்கதாய் உள்ளன.

இவற்றில் முக்கியமானவையாக,

1) மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்ற நிலைப்பாடு.

2) நோர்வேயை மத்தியஸ்துவ முயற்சியில் இருந்து வெளியேற்றுதல்.

3) சிறிலங்கா அரசியல்வாதிகளின் குணநலன் என்பன கொள்ளத்தக்கன.

மேலும் வாசிக்க.............
http://www.tamilnaatham.com/articles/jeyar...aj/20051208.htm
Reply


Messages In This Thread
மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா? - by kurukaalapoovan - 12-08-2005, 07:06 PM
[No subject] - by அகிலன் - 12-09-2005, 01:25 AM
[No subject] - by Thala - 12-09-2005, 10:05 AM
[No subject] - by MUGATHTHAR - 12-10-2005, 06:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)