![]() |
|
மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா? (/showthread.php?tid=2135) |
மீண்டும் ஒரு இந்தியத் தலையீடா? - kurukaalapoovan - 12-08-2005 <b>சிறிலங்காவின் அழைப்பு இந்தியாவால் நிராகரிப்பு?</b> நோர்வேயை வெளியேற்றி இந்தியாவை ஏற்பாட்டாளர் நிலைக்குக் கொண்டுவருவதே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நகர்வாக இருந்தது. இதற்கு மங்கள சமரவீரவின் இந்தியாவிற்கான பயணத்தின் மூலம் பிள்ளையார் சுழி போடுவதற்கு மகிந்த ராஜபக்ஷ முயற்சித்தார். மங்கள சமரவீரவின் இந்திய விஜயமானது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீட்டிற்கான அழைப்பிற்கானதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆகையினால் இந்தியாவின் நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாக இருந்தது. ஆயினும், இந்தியாவின் நிலைப்பாடானது சிறிலங்கா அரசின் எதிர்பார்க்கைக்கும் ஏற்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையே தற்பொழுது வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளன. அதாவது தற்போதைய சூழ்நிலை தனது பிரவேசத்திற்கு ஏற்றதாக இல்லை என இந்தியா கருதுவது போன்று தெரிகின்றது. அவ்வாறு இந்தியா கருதுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் சுட்டிக்காட்டத்தக்கதாய் உள்ளன. இவற்றில் முக்கியமானவையாக, 1) மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்ற நிலைப்பாடு. 2) நோர்வேயை மத்தியஸ்துவ முயற்சியில் இருந்து வெளியேற்றுதல். 3) சிறிலங்கா அரசியல்வாதிகளின் குணநலன் என்பன கொள்ளத்தக்கன. மேலும் வாசிக்க............. http://www.tamilnaatham.com/articles/jeyar...aj/20051208.htm - அகிலன் - 12-09-2005 அதில முக்கியமானதை விட்டுட்டதாகவே படூது குறுக்ஸ். அதாவது இந்தியா தலையிடும் முன் இயன்ற அளவு புலிகளைப் பலவீனப் படுத்துதல். அதுதான் அரசியல் பேரம் பேசலுக்கு இந்தியாவை மேல்த்தட்டில் உயர்த்தி வைத்திருக்கும். இல்லாவிட்டால் புலிகளோட (சாறம் கட்டின இந்தப்பள்ளிக்கூடப் பெடியளோட) சரிசமமாய் இருந்து பேச வேண்டி வரும். - Thala - 12-09-2005 அகிலன் Wrote:அதில முக்கியமானதை விட்டுட்டதாகவே படூது குறுக்ஸ். அதாவது இந்தியா தலையிடும் முன் இயன்ற அளவு புலிகளைப் பலவீனப் படுத்துதல். அதுதான் அரசியல் பேரம் பேசலுக்கு இந்தியாவை மேல்த்தட்டில் உயர்த்தி வைத்திருக்கும். இல்லாவிட்டால் புலிகளோட (சாறம் கட்டின இந்தப்பள்ளிக்கூடப் பெடியளோட) சரிசமமாய் இருந்து பேச வேண்டி வரும். இலங்கை பாதுகாப்புக்காய் செலவளிக்கும் பணத்தை இந்தியா தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்காய் நேரடியாக செலவளிக்க ஒதுக்குவதாய் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் அண்டை நாடான இலங்கையில் என்ன உண்மையில் நடக்கிறது எண்ட விடயம் கட்டாயம் இந்தியாவுக்கு நன்குதெரியும். மக்களின் ஆதரவு இருக்கும் வரை புலிகளையோ இல்லை அவர்கள் ஆதரவு அமைப்புகளையோ ஒண்டும் செய்ய முடியாதவிடயம் என்பதை அவர்கள் பட்டு உணர்ந்தவர்கள். தமிழ்மக்களை எதிர்ப்பதும் புலிகளை எதிர்ப்பதும் ஒண்றுதான் என்பது நன்குதெரிந்தவர்கள் தங்களுடைய பழய கொள்கைகளுடன் திரும்பி வரமாட்டார்கள். அதுவும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க. - MUGATHTHAR - 12-10-2005 இந்தியா இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்தியா மீதிருந்த ஈழமக்களின் மனநிலை வேறு இப்ப இருக்கிற மனநிலை வேறு இந்தியா தனது புலனாய்வு மூலம் இதை அறிந்திருப்பார்கள் இப்பிடி ஒரு பகுதியினரின் முற்றான எதிர்ப்பு இருக்கும் போது எமது விடயத்தில் அவர்கள் நேரடியாக பங்கேற்பது ஆரோக்கியமான விடயமல்ல சில மறைமுகமான உதவிகளை இலங்கை அரசாங்கத்துக்குச் செய்யலாம் ஆனா சிங்கள மக்களும் இந்தியாமீது இருக்கும் வெறுப்பு அப்பிடித்தானே இருக்கிறது (இங்குள்ள சிங்களவருடன் கதைத்தில் உதாரணத்துக்கு இந்தியா கிரிக்கெட் மச் எந்த நாட்டுடன் விளையாடினாலும் இந்தியாக்கு எதிராகத்தான இவர்களின் ஆதரவு இருக்கும் ) அப்பிடியிருக்கும் போது எதற்கு அரசாங்கம் இந்தியாவை கூப்பிட்டுக் கொண்டு நிக்கிறது ஓ...........இதுதான் அரசியலோ..... |